தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் கொண்டு முடிசூடா மன்னனாகத் திகழ்பவர் தளபதி விஜய். தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. விஜய் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் வேற லெவல். கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. பிகில் படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவருடன் படத்தில் நடிக்க பல நடிகர்கள் நடிகைகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், இவரை வைத்து படம் இயக்க பல பிரபல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசையில் நிற்கிறார்கள். அந்த வகையில் விஜயை வைத்து படம் இயக்க போவதாக பிரபல இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.

Advertisement

அதில் அவர் கூறியிருப்பது, நான் மகான் அல்ல, பாண்டியநாடு மாதிரி ஒரு படத்தை மீண்டும் எதிர்பார்க்கலாம். அப்படியொரு படம் எடுத்தால் விஜய் சாரை வைத்து தான் பண்ணுவேன். அதுக்கான கதையும் எழுதி கொண்டு இருக்கிறேன் என்று கூறினார். தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் சுசீந்திரனும் ஒருவர். இவர் 2009 ஆம் ஆண்டு வெளி வந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து இவர் நான் மகான் அல்ல, ராஜபாட்டை, பாண்டிய நாடு, ஜீவா, நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட பல படங்களை கொடுத்து உள்ளார். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளி வந்த “கென்னடி கிளப்” மற்றும் “சாம்பியன்” ஆகிய இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

Advertisement
Advertisement