இதுவரை 50 நடிகர்களுக்கு மேல் அறிமுகப்படுத்தி இருக்கிறேன், ஒரு இயக்குனர்னா – இயக்குனர் சுசீந்திரன் ஓப்பன் டாக்

0
128
- Advertisement -

இயக்குனர் சுசீந்திரன் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள மிக பிரபலமான இயக்குனர்களில் சுசீந்திரனும் ஒருவர். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்டவர். இவர் 2009 ஆம் ஆண்டு வெளி வந்த ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நான் மகான் அல்ல, ராஜபாட்டை, பாண்டிய நாடு, ஜீவா, நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட பல படங்களை கொடுத்து உள்ளார்.

-விளம்பரம்-

ஆனால், கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த ஈஸ்வரன், வீரபாண்டியபுரம், குற்றம் குற்றமே போன்ற படங்கள் மக்களிடையே கலவையான விமர்சனங்களை தான் பெற்று இருந்தது. தற்போது இவர் ‘2K லவ் ஸ்டோரி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகின்ற பிப்ரவரி 14- ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இந்தத் திரைப்படம் தொடர்பாக பட குழுவினருடன் சுசீந்திரன் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ‌அந்த வகையில் ஒரு பேட்டியில் சுசீந்திரன், இந்தப் படத்துல ஒரு கனெக்ட் இருக்கும். 10 வருஷத்துக்கு முன்னாடி அண்ணன் தங்கச்சி பைக்ல போனா கூட தப்பா பாப்பாங்க. ஆனால், இப்போ அப்படி இல்லை. பெற்றோர்கள் அதை ஏத்துக்கிட்டாங்க. அப்படி ஒரு ஆரோக்கியமான நிலை வந்துடுச்சு.

- Advertisement -

சுசீந்திரன் பேட்டி:

நான் என்னுடைய படங்களில் ஒவ்வொரு ஃபிரேம்லயும் என்ன பண்ணனும்னு நடிகர்கள் கிட்ட சொல்லிடுவேன். அனுபவம் இருக்கிறவங்க கிட்ட வசனத்தையும் அந்தக் கதாபாத்திரத்தின் மனநிலையையும் சொல்லிடுவேன். ஆனால், புதுசாக நடிக்கிறவங்க கிட்ட கால் எங்க வைக்கணும், கை எங்க இருக்கணும் என்று எல்லாமே சொல்லுவேன். அப்படித்தான் என் முதல் படத்தில் இருந்து நான் பண்ணுவேன். அந்த மாதிரி இதுவரைக்கும் நான் 50 நடிகர்களுக்கு மேல சொல்லிக் கொடுத்து அறிமுகப்படுத்தி இருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் நாலு பேர அறிமுகம் பண்ணிடுவேன். மூணு புது அசிஸ்டன்ட் டைரக்டரை சேர்த்துக் கொள்வேன்.

ஆத்ம திருப்தி கொடுக்கும்:

மேலும், நம்ம அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். அது என் மேல எனக்கு இருக்கக்கூடிய கட்ஸ். எனக்குப் பெரிய நடிகர்களை வைத்து படம் பண்ணுவதை விட, புது முகங்களை வச்சு பண்ணுவது தான் சந்தோஷம். நான் புது முகங்களை வைத்து பண்ணின எல்லா படமும் வித்தியாசமான கதையில இருக்கும். ஏன்னா, வித்தியாசமான படங்கள் என்னால் பண்ண முடியும். அது எனக்கு ஆத்ம திருப்தி கொடுக்கும். நான் ‘பாயும் புலி’ படத்திற்குப் பிறகு பெரிய ஹிட் படம் கொடுக்கல. ஆனா, ‘ஜீவா’ படம் இன்னைக்கு வெளிவந்தால் கூட 100 கோடி வசூல் செய்யும்.

-விளம்பரம்-

அதுதான் டைரக்டருக்கு அழகு:

என்னால 3, 4, 5 கோடிகள் செலவு பண்ணி ரூபாய் 500 கோடி கலெக்ட் பண்ற அளவுக்குப் படம் பண்ண முடியும். அதற்கு எனக்கு கதை கிடைக்கணும். அதை நான் ஸ்கிரீன்ல கொண்டுவர முடியும். ஸ்கிரிப்டு தான் முக்கியம். விஜய் வச்சு ரூபாய் 300 கோடி படம் பண்ணிட்டு, ரூபாய் 500 கோடி எடுக்கிறது பெரிய விஷயம் இல்லை. 5 கோடியில் எடுத்துட்டு 500 கோடி எடுக்கணும். அங்கதான் டைரக்டர் நிற்கிறான். அந்த முயற்சி தான் இப்போ நான் பண்ணிட்டே இருக்கேன். நான் அறிமுகம் பண்ணின ஆர்டிஸ்ட்கள் எல்லாம் நான் இப்ப கால் பண்ணினால் கூட எனக்கு டேட் கொடுப்பாங்க.

என் பாதை இதுதான்:

அதே மாதிரி புது முகங்களை வச்சு ஏன் படம் பண்றீங்க, பெரிய படமா பண்ணுங்க. அஜித்தை வச்சு பண்ணுங்க, விஜயை வச்சு பண்ணுங்கன்னு சொல்லுவாங்க. அது எல்லாம் இயக்குனர்களுக்கும் இருக்கும் கனவுதான். நான் சினிமா பண்ணனும்னு தான் வந்தேன், ரஜினி சார், கம்ல் சார், அஜித், விஜய் வெச்சி படம் பண்ண வரல. நான் சினிமால இருக்கணும், அந்த சினிமா என்டர்டைன்மென்ட்டா இருக்கணும். என்னால் நிச்சயம் 5 கோடி வச்சு 100 கோடி எடுக்கிற மாதிரி ஒரு படம் பண்ண முடியும். நான் அதுதான் சரியான பாதை என்று நம்புகிறேன் என்று சுசீந்திரன் நம்பிக்கையோடு பேசியுள்ளார்.

Advertisement