இயக்குனர் சுசீந்திரனின் மனைவி மற்றும் பசங்கள பார்த்திருக்கீங்கள – இவ்ளோ பெரிய பசங்களா.

0
1293
susi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் சுசீந்திரனும் ஒருவர். இவர் 2009 ஆம் ஆண்டு வெளி வந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நான் மகான் அல்ல, ராஜபாட்டை, பாண்டிய நாடு, ஜீவா, நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட பல படங்களை கொடுத்து உள்ளார்.இவர் இயக்கத்தில் வெளி வந்த “கென்னடி கிளப்” மற்றும் “சாம்பியன்” ஆகிய இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த இரண்டு படமும் விளையாட்டை மையமாக வைத்த கதை.

-விளம்பரம்-

ஆனால், சமீபத்தில் இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன் ‘ திரைப்படம் இவர் இயக்கிய படங்களிலேயே படு மோசமான படமாக அமைந்து இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த படம் வெறும் 22 நாட்களில் எடுக்கப்பட்டது தான். இயக்குனர் சுசீந்திரன் தீபாவளி திரைப்படத்தில் கூட ஒரு சிறு காட்சியில் நடித்து இருப்பார். சுசீந்திரன் ரேணுகா தேவி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இதையும் பாருங்க : சீரியலில் கைகூடிய காதல் நிஜத்தில் கூடல – பிரபல வில்லன் நடிகருடன் காதல். திருமணத்திற்கு முன் பிரேக்கப்.

- Advertisement -

இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். சமீபத்தில் இவரது குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சுசீந்திரன் மகனை பார்த்து பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய மகன்களா என்று வியந்து வருகின்றனர். ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சுசீந்திரன் விஜய்யை வைத்து படம் இயக்கப்போவதாக கூறி இருந்தார். அதில் பேசிய அவர், நான் மகான் அல்ல, பாண்டியநாடு மாதிரி ஒரு படத்தை மீண்டும் எதிர்பார்க்கலாம். அப்படியொரு படம் எடுத்தால் விஜய் சாரை வைத்து தான் பண்ணுவேன்.

அதுக்கான கதையும் எழுதி கொண்டு இருக்கிறேன் என்று கூறி இருந்தார். ஆனால், நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி படத்திலும் விஜய் கமிட் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் சுசீந்திரன், ஏஞ்சலீனா, ஷிவா ஷிவா ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement