ப்ரோமோவை பார்த்து ஊரே கழுவி ஊற்றிய விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள டி ஆர். வெளியான புகைப்படம்.

0
2167
tr
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் இசையமைப்பாளர் பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்ட நபராக திகழ்ந்து வருபவர் டி ராஜேந்திரன் தன்னுடைய அடுக்குமொழி வசனங்கள் ஆல் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை ஊட்டியவர் ஆரம்பத்தில் பல்வேறு படங்களை இயக்கிய இவர் பின்னர் ஹீரோவாக பல படங்களில் நடித்திருந்தார் இவரது மகன் சிம்பு ஹீரோவான பின்னரும் அவருக்கு இணையாக வீராச்சாமி படத்தின் மூலம் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்தார்.

-விளம்பரம்-
Thendral Vandhu Ennai Thodum - Disney+ Hotstar

தமிழ் சினிமாவில் கலக்கிய டி ஆர், சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று இருக்கிறார். ஆனால், இதுவரை சீரியல்களில் நடித்தது கிடையாது. இப்படி ஒரு நிலையில் விஜய் டிவியின் சீரியல் மூலம் தனது சின்னத்திரை என்ட்ரியை துவங்கி இருக்கிறார் டி ஆர்.

இதையும் பாருங்க : பட வாய்ப்பால் விலகினேனா – ரக்ஷிதா சொன்ன விளக்கம். இவரிடம் தான் ரசிகர்கள் கேட்க வேண்டுமாம்.

- Advertisement -

விஜய் டிவியின் சமீபத்தில் தொடங்கப்பட்ட, சர்ச்சை சீரியலான ‘தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற சீரியலில் டி.ராஜேந்தர் நடிக்கிறார். தற்போது, டி.ராஜேந்தர் விஜய் டிவியில் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரல் ஆகி வருகிறது.

இந்த சீரியலின் ப்ரோமோ வெளியான போதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. திருமணம் ஆகிவிட்டால் தாலியை கழட்ட கூடாது, இப்படித்தான் உடை உடுத்த வேண்டும் போன்ற பிற்போக்கு தனங்கள் சீரியல் மூலமாகத்தான் இன்னும் சமூகத்தை விட்டு அகலாமல் இருப்பதாகவும், இது போன்றவை தான் சமூகத்தை விஷமாக்குவதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

-விளம்பரம்-
Advertisement