பட வாய்ப்பால் விலகினேனா – ரக்ஷிதா சொன்ன விளக்கம். இவரிடம் தான் ரசிகர்கள் கேட்க வேண்டுமாம்.

0
1897
rachitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அதே போல ராஜா ராணி, கனா காணும் காலங்கள், ஆபீஸ், மௌன ராகம் என்று பல சீரியல்கள் இரண்டு பாகங்கள் வெளியானது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கிருவார் சீரியலும் இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களாக இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் வில்லனாக இருந்த முத்து ராசாவை யாரோ சுட்டு கொன்றுவிட்டனர். அவரை கொன்றது யார் என்ற கேள்வி தான் நீண்ட வாரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதையும் பாருங்க : ஓபன் வைத்த உள்ளாடையில் கிளாமரில் அதகளம் பண்ணும் பார்வதி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் இருந்து ரக்ஷிதா விலகியதாக செய்திகள் பரவியது. ரக்ஷிதா தற்போது கன்னட படம் ஒன்றில் நாயகியாக நடித்து வருவதால் தான் இந்த சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரஷிதா, கண்ட மேனிக்கு புரளி கிளப்பும் யூடுயூப் பக்கங்கள் கொஞ்சம் உண்மையை எழுதுமாறு கூறியுள்ளார்.

மேலும், நான் ஏற்கனவே சொன்னதுபோல எது நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும் நான் சீரியலில் இருந்தாலும் இல்லை என்றாலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்னுடைய படங்களுக்கும் சீரியலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நான் ஏன் சீரியலில் இல்லை என்பது எனக்கே தெரியவில்லை. அதனால் என்ன நடக்கிறது என்பதை சொல்ல என்னால் முடியவில்லை. சீரியலின் தன்மை அதுதான் அதற்கே உறுத்த சில திருப்பங்கள் இருக்கும்.

-விளம்பரம்-

அப்போது நாம் காத்திருக்கத்தான் வேண்டும். உங்களுக்கு இதற்கான காரணம் தெரிய வேண்டுமென்றால் இயக்குனருக்கோ அல்லது சீரியல் குழுவின் முக்கிய நபரான ரமணன் சாருக்கோ மெசேஜ் செய்து கேளுங்கள். ஏனென்றால் இந்த வதந்திகளுக்கு பின்னர் கூட அவர்களிடம் இருந்து எந்த பதிலும் எனக்கு கிடைக்கவில்லை. அதனால் நீங்களாவது கேட்டு சொல்லுவீங்களானு பாருங்க, ஏன்னு கேட்டு என்று கூறியுள்ளார்.

Advertisement