தளபதி 66 படம் குறித்து இயக்குனர் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். கடைசியாக விஜய் நடித்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். படத்தில் ஒரு மால்-லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால்-லில் விஜயும் சிக்கிக் கொள்கிறார். விஜய், மால்-லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான். பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய் இந்த படத்துக்கு எப்படி ஓகே சொன்னார்? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பீஸ்ட் படத்தின் நிலைமை:
நிகழ்ச்சி ஒன்றில் கதை எழுதுவதற்கு மூன்று மாதங்களுக்கு மேல் நான் அமர மாட்டேன் என்று நெல்சன் பேச்சையும், பீஸ்ட் படத்தையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இப்படி எக்கச்சக்கமான நெகட்டிவான விமர்சனங்கள் பீஸ்ட் பெற்று இருந்தாலும் வசூலில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாள் வசூலில் முந்தைய படங்களின் சாதனையை பீஸ்ட் முறியடித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பீஸ்ட் அடுத்து ரஜினியை வைத்து நெல்சன் இயக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி 66 படம் பற்றிய தகவல்:
ஆனால், இன்னும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தற்போது விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. வம்சி தமிழில் ஏற்கனவே கார்த்தி, நாகர்ஜுனா நடித்த தோழா படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார்.
தளபதி 66 படத்தில் சரத்குமார்:
மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் எரோட்டோமேனியா ( Erotomania) நோய் பின்னணியில் எடுக்கப்படுவதாக தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். மேலும், இப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இணைந்துள்ளார். இந்நிலையில் விஜய்யின் படத்தை இயக்கும் இயக்குனர் வம்சி அவர்கள் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
இயக்குனர் வம்சி அளித்த பேட்டி:
அப்போது அதில் அவர் பேசியிருப்பது, தளபதி 66 படத்தை பற்றி பேசவே பயமாக இருக்கின்றது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மேலும், சில நாட்களில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தைப் பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது. ஆனால், விஜய் படத்தை ஒரு சிறந்த படமாக ரசிகர்களுக்கு வழங்க முடியும் என நம்புகிறேன் என்று கூறி இருக்கிறார். இப்படி வம்சி பேசியிருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பீஸ்ட் படத்தின் ஆரம்பத்திலேயே நெல்சன் அதிகம் பேசி இருப்பதைப் போல் தானும் பேசி வாங்கிகட்டிக் கொண்டால் என்னவாவது என்ற பயத்தில் வம்சி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.