விஜய்யின் இந்த படமும் என் கதை தான்…!வருண் ராஜேந்திரனின் அடுத்த சர்ச்சை …!

0
502
Varunrajendiran

இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தன்னுடைய கதை என்று உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘செங்கோல்’ என்ற தன்னுடைய கதையை முருகதாஸ் திருடிவிட்டார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று(அக்டோபர் 30)நடைபெற்ற நிலையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸும், “சர்கார்” கதை வருணுடையது தான் என்று ஒப்புக்கொண்டார். ஆனால், கதை கரு மட்டும் தான் அவருடையது என்றும் அதனால் அவரை கௌரவிக்கும் வகையில் வருணின் பெயரை நன்றியுரையில் சேர்ப்பதாக கூறியிருந்தார்.

ஒரு வழியாக சர்க்காரின் பிரச்னை ஓய்ந்த நிலையில் இயக்குனர் வருண் ராஜேந்திரன் பேட்டி பேட்டி ஒன்றில் புதிய சர்ச்சை ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.சமீபத்தில் பேட்டியளித்த அவர், செங்கோல் என்ற கதையில் விஜயை வைத்து படம் எடுக்கலாம் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே முடிவெடுத்தாகவும்.

அதே போல விஜய் வைத்து சட்ட கல்லுரி மாணவன் போன்ற ஒரு கதையும் தன்னிடம் இருந்தாவும் அது அவர் நடித்த ‘தமிழின்’ படத்தின் கதை போன்று தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்று ட்விட்டரில் கௌஷிக் என்பவர் பதிவிட்டுள்ளார்.