தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்த பல வெற்றிகரமான இயக்குனர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனரான வசந்த பாலனும் ஒருவர். இவர் இயக்கிய அங்காடிதெரு, வெயில் போன்ற பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல 2006 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. மேலும் அங்காடித்தெரு திரைப்படம் சிறந்த படைப்பிற்கான விருதுகளையும் அள்ளிக் கொடுத்தது.
வெயில் மற்றும் அங்காடித்தெரு திரைப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய காவியத்தலைவன் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் இவருக்கு சிறந்த இயக்குனர் என்ற விருதையும் பெற்றுத்தந்தது. ஆனால் இத்தனை வெற்றி படங்களை கொடுத்த வசந்தபாலனின் முதல் படம் மாபெரும் தோல்விப் படம் தான் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. இயக்குனர் வசந்தபாலன் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் காதலன் இந்தியன் போன்ற படங்களில் ஷங்கருக்கு உதவி இயக்குனராக இருந்தவர் வசந்தபாலன். ஆனால் இவர் முதன்முதலில் இயக்கிய ஆல்பம் திரைப்படம் மாபெரும் தோல்விப் படமாக அமைந்தது. இதுகுறித்து பேட்டி ஒன்று பங்கேற்றுள்ள வசந்தபாலன் தெரிவித்தது, நான் இயக்கிய முதல் படம் மாபெரும் தோல்வி படமாக அமைந்தது. ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கில் இந்த திரைப்படத்தை வெறும் பத்துப் பேர்தான் பார்த்தார்கள். இதனால் என்னுடைய நண்பர்களில் பலர் என்னை கேலி செய்யாதீர்கள் செய்தார்கள். எனது நண்பர்களே நீ உண்மையில் சங்கரிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றினாயா இல்லை ஆபிஸ் பாயாக பணியாற்றினியா என்று கேலி. செய்தார்கள்.
ஷங்கரின் உதவியாளராக இருந்ததும் இப்படி ஒரு மோசமான படத்தை நான் இயக்கி என்று ஆச்சரியப்பட்டார்கள். அந்த கருத்துக்கள் என்னை மிகவும் பாதித்தது. நான் இயக்கிய படம் தோல்விப் படம்தான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அந்த படத்தின் தோல்விக்கு பின்னர் தன்னுடைய குருநாதரை வைத்து வெயில் படத்தை இயக்கினேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது என்று கூறியிருக்கிறார் வசந்தபாலன். தற்போது வசந்தபாலன் ஜிவி பிரகாஷ் வைத்து ஜெய் என்ற படத்தை இயக்கி இருக்கிறார் இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது