ஹாட்ஸ்டாரில் குறைவாக பார்க்கப்பட ‘லைவ் டெலிகாஸ்ட்’ – கேலி செய்த ஒவ்வொருவருக்கும் வெங்கட் பிரபு முன்வைத்த கேள்விகள்.

0
11296
vp
- Advertisement -

அமேசான், நெட்பிலிக்ஸ் என்று வெறும் இங்கிலிஷ் வெப் சீரியஸாக பார்த்துவிட்டு இருந்த தமிழ் ரசிகர்களுக்கு சமீப காலமாக பல்வேறு இயக்குனர்கள் தமிழில் வெப் சீரிஸாக வாரி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கமெர்ஷல் இயக்குனர் லிஸ்டில் இருக்கும் வெங்கட் பிரபுவும் ‘லைவ்’ டெலகாஸ்ட் என்ற வெப் சீரிஸை இயக்கி வெளியிட்டுளளார். காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் கயல் ஆனந்தி ஊக்குவித்து கோமாளி புகழ் அஸ்வின் நடிகர் வைபவ் கூடவே வெங்கட்பிரபு குழுவில் இருந்து சில நடிகர்கள் என்று ஒரு புதிய டீமை அமைத்து இந்த வெப் சீரிஸை உருவாக்கி இருக்கிறார் வெங்கட்பிரபு.

-விளம்பரம்-

பேயை லைவாகக் காட்டினால் கல்லா கட்டலாம் என நினைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியும், அதன் முடிவுகளும்தான் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸான ‘லைவ் டெலிகாஸ்ட்’-ன் ஒன்லைன். பேய்க் கதைகளை மையமாக வைத்து நிகழ்ச்சி நடத்துகிறார் ஜென்னி. நிகழ்ச்சிக்குத் திடீரென பிரச்னை வர, புதிதாக வேறொரு ஐடியா பிடிக்கிறது அவர் குழு. பேய் இருக்கும் வீட்டுக்குச் சென்று, அதை லைவாகப் படம் பிடித்தால் ஷோ பிச்சிக்கும் என யாரோ ஐடியா தர, அதைப் பின்பற்றுகிறார்கள். வீட்டுக்குள் வந்தவர்களை, ‘இது ஒரு வழி பாதை’ என பேய் போக்குக்காட்ட அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை 7 எபிசோடுகளாக நீட்டி இருக்கிறார் வெங்கட் பிரபு.

இதையும் பாருங்க : யப்பா, யப்பா, இதுவரை இல்லாத படு கிளாமர் உடையில் இனியா நடத்திய போட்டோ ஷூட்.

- Advertisement -

சென்னை 28′ படத்துக்கு முன்னர் வெங்கட் பிரபு எடுக்க நினைத்திருந்த கதை என்று அவரே கூறி இருந்தார். . வெங்கட் பிரபுவின் லைவ் டெலிகாஸ்ட் தொடரை த்ரில்லர், பயம், காமெடி என எதுவுமே முழுமையாக இல்லாமல் மையமாகவே இறுதி சென்று முடிகிறது. இந்த வெப் சீரியஸ்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடக்கிக்கவில்லை. அவ்வளவு ஏன் ஹாட் ஸ்டார் ஒரிஜினலில் மிகவும் குறைவாக பார்க்கப்பபட்ட சீரியஸ் என்ற பெயரை எடுத்துள்ளது.

மேலும், இந்த சீரிஸ்ஸில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்,படத்தின் கிளைமாக்ஸ் சரியில்லை, படத்தின் பேய்க்கு ஏன் பிளாஸ் பேக் இல்லை என்று இந்த படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அதற்கு எல்லாம் பொறுமையாக சமூக வலைதளத்தில் பதில் அளித்து வருகிறார் வெங்கட் பிரபு, அந்த வகையில் OTT யில் மிகவும் குறைவான பேரால் பார்க்கப்பட்ட சீரியஸ் என்ற விமர்சனத்தை பொறுக்க முடியாமல் டீவீட்டை தட்டியுள்ளார் வெங்கட் பிரபு.

-விளம்பரம்-

அதில், இந்த தொடரில் இடம் பெற்ற பேய்கள் பற்றிய நீயா நானா விவாத காட்சியின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள வெங்கட் பிரபு, கான்ஜுரிங், அனபெல்லா இதுல எல்லாம் பெரிய பிளேஸ் பேக் வைக்கலனாலும் ஒத்துக்கறீங்களே ? எல்லா விமர்சகர்களுக்கும் இந்த கேள்விக்கு என்ன பதில் ? பழிவாங்க காரணம் இல்லாத பிளாஷ் பேக்க எதுக்கு ஒத்துக்க மாடீங்கிறீங்க ? இது #LiveTelecast-ல் இருந்து ஒரு சிறிய கிளிப் என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல நெட்டிசன் ஒருவர், உங்கள் பதிலுக்கு நன்றி, இது தான் என்னுடைய கருத்து. படத்தில் திகிலான விஷயங்கள் 0. உங்களின் ட்ரேட் மார்க் ஹுமார் வொர்க் ஆகி இருக்கு. கதை, காஞ்சனா 2 போல தான் இருக்கு. இதில் ஒரே வித்யாசம் இது ‘Live cast ‘ என்று கேலியாக பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு காஞ்சனா 2 முளை கதையை சொல்லுங்க.

Advertisement