இன்னிக்கி எல்லாம் அப்படி பேசினா வாய கிழிச்சிடுவாங்க- படங்களில் பெண்கள் விமர்சனம் குறித்து வெற்றிமாறன்.

0
866
vetri

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இவர் தனுஷை வைத்து இயக்கிய படம் எல்லாம் வேற லெவல். தனுஷுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்து இவர் தான் என்று சொல்லலாம். இவர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். பின் வெற்றி மாறன் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

அதற்கு பின் 2007 ஆம் ஆண்டு தனுசை வைத்து பொல்லாதவன் என்ற படத்தை இயக்கி சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார்.இந்த படத்திலேயே வெற்றி மாறனுக்கு தேசிய விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து இவர் ஆடுகளம், உதயம், காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். இறுதியாக இவரது இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் தனுஷுக்கு தேசிய விருதையும் வாங்கி கொடுத்தது.

இதையும் பாருங்க : பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விளகுகிறாரா குமரன் – இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் சோகம்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வெற்றிமாறன், தமிழ் சினிமாவில் பெண்களை இழிவாக பேசும் வசனங்கள் குறித்து பேசியுள்ளார். அந்த வீடியோவை நெட்டிசன்கள் சிலர் படையப்பா படத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணனிடம் ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் வசனத்தையும், சிவகாசியில் அசினை பார்த்து விஜய் ஆடை குறித்து கிளாஸ் எடுக்கும் சீனையும் கோர்த்துள்ளனர்.

இந்த வீடியோவுக்கு பின்னர் வெற்றி மாறன் பேசிய வீடியோவை சேர்த்துள்ளனர். அதில் வெற்றிமாறன், முன்பெல்லாம் படத்தில் ‘பொம்பளைக்கு அடக்கம் இருக்கனும்’ என்றெல்லாம் வசனம் வைப்பாங்க. இன்னிக்கி எல்லாம் அப்படி பேசினா வாய கிழிச்சிடுவாங்க. அது மாதிரி விஷயங்கள் எல்லாம் வந்தால் கேள்வி கேட்பார்கள். அதை எல்லாம் நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பிறவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement