இந்தி எதிர்ப்பு விவகாரம் : தனது மகனுடன் ட்ரெண்டிங் டி-ஷர்ட்டை அணிந்து மாஸ் காட்டிய வெற்றிமாறன்.

0
1148
vetrimaran

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியை கட்டாய படமாக படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும், தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.பல மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்ற நிலையில், இந்த கொள்கை இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் தற்போது மீண்டும் இந்தி எதிர்ப்பு அரசியல் தலை தூக்க துவங்கி உள்ளது.

சமீபத்தில் கூட தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்றும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் கூட #இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ் டேக் கூட கடந்த சில நாட்களுக்கு முன் ட்ரெண்டிங்கில் வந்தது.

- Advertisement -

திமுக போன்ற பல்வேறு கட்சியினர் இந்த இந்தி எதிர்ப்பு பிரச்சனையில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் கூட இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் ‘I am a தமிழ் பேசும் indian ‘ என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை தானும் தனது மகனும் அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Vetrimaran's next production venture revealed! - Tamil News - IndiaGlitz.com

ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற வெற்றிமாறன்,2011 ஆம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் இமிகிரேஷனில் இருந்த அதிகாரி ஒருவர் வெற்றிமாறனை ‘, ‘நீங்களாம் இப்படித்தான், யு தமிழன்ஸ், காஷ்மீரீஸ் ஆர் ஓன்லி பிரேக்கிங் திஸ் கன்ட்ரி, நீங்களாம் தீவிரவாதிங்க’’ என்று கூறி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் நிறுத்தி வைத்ததாக கூறி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement