கடைசியாக விஜயகாந்த் நடித்திருக்கும் படத்தின் காட்சி வீடியோ தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான். கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் சில தினங்களுக்கு காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றார்கள். மேலும், விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை அதிகம் பாதித்து இருக்கிறது. அதோடு விஜயகாந்த் இறப்பில் அவர் இரண்டு மகன்கள் கதறி கதறி அழுது இருக்கிறார்கள். விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் விஜயகாந்த்க்கு உள்ளனர். விஜய பிரபாகரன், தாயார் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மாமா எல் கே சதீஷ் ஆகியோரை பின்பற்றி தேமுதிக-வில் செயல்பட்டு வருகிறார்.
சண்முக பாண்டியன் திரைப்பயணம்:
மேலும், இளையவரான சண்முக பாண்டியன் தனது தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடித்து உள்ளார். இவர் விஜயகாந்த் உடன் சேர்ந்து 2015 ஆம் ஆண்டு வெளியான படம் சகாப்தம். இந்த படத்தில் தான் விஜயகாந்த் கடைசியாக நடித்திருந்தார். இதனை அடுத்து சண்முக பாண்டியன் மதுர வீரன் என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.
தமிழன் என்று சொல் படம்:
இந்த நிலையில் விஜயகாந்த் கடைசியாக நடித்திருக்கும் படத்தின் காட்சி வீடியோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய மகன் சண்முக பாண்டியன் உடன் சேர்ந்து தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார். அந்தப் படத்திற்கான போட்டோ சூட், டயலாக் எல்லாம் எடுக்கப்பட்டது. இந்த படம் வரலாறு கதையை மையாக வைத்து எடுக்கப்பட்ட இருந்ததால் விஜயகாந்த் மன்னன் வேடத்தில் நடிப்பதாக இருந்தார்.
விஜயகாந்த் கடைசியாக நடித்த காட்சி:
மேலும், இது தொடர்பாக பேட்டியும் அளித்து இருந்தார்கள். இந்த படத்தை இயக்குனர் அருண் பொன்னம்பலம் இயக்கத்தில் உருவாகியிருந்தது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க இருந்தார். இந்த படத்திற்கான வேலைகள் எல்லாம் தொடங்கினார்கள். ஆனால், விஜயகாந்த்தினுடைய உடல்நிலை சரியில்லாமல் போனதாலும், தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகியாதல் இந்த படம் அப்படியே நின்று விட்டது. மீண்டும் இந்த படம் எடுக்குவதாகவும் கூறப்படுகிறது.
சண்முகபாண்டியன் நடிக்கும் படங்கள்:
தற்போது இந்த படத்திற்காக விஜயகாந்த் நடித்திருக்கும் கடைசி காட்சி வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும், சண்முகபாண்டியன் அவர்கள் படைத்தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கும்கி படம் போல யானை சம்மந்தப்பட்ட படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது ஷண்முக பாண்டியன் சசிகுமார் இயக்கி வரும் குற்றப்பரம்பரை என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இதற்காக சண்முக பாண்டியன் அதிகமாக தாடி, முடி வளர்ப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.