விஜய்க்கும் ஒரு தேசிய விருது கிடைக்குமா ? அதான் இந்த இயக்குனர் படம் பண்ண ஓகே சொல்லிட்டாரே.

0
1265
- Advertisement -

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கடந்து. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க முகமூடி பட நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் துவங்கப்படவில்லை. இப்படி ஒரு நிலையில் விஜய்யுடன் படம் இயக்குவது குறித்து இயக்குனர் வெற்றிமாறன் சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய பேட்டியில், நடிகர் விஜய்யை வைத்து விரைவில் படம் இயக்க உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார். சூரி நடிக்கும் படத்தை முடித்த பின் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ள வெற்றிமாறன், அதன்பின் விஜய் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 67-வது தேசிய திரைப்பட விருதுகளில் வெற்றிமாறனின் அசுரன் படம் இரண்டு விருதுகளைப் பெற்று கவனம் ஈர்த்தது. எனவே, விஜய்க்கும் தேசிய விருதை வெற்றிமாறன் படம் வாங்கிக்கொடுக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Filmmaker Vetrimaaran confirms working on a script for actor Vijay |  Hindustan Times

வெற்றிமாறன் எழுதிய முதல் கதையை விஜய்க்கு தான். இதுகுறித்து ஏற்கனவே ஒரு பேட்டியில் பேசி இருந்த வெற்றமாறன், நான் முதன் முதலாக விஜய்யை வைத்து தான் கதை ஒன்று எழுதினேன். ஆனால், என்னால் கதை சொல்ல முடியவில்லை. ஏன்னா, எனக்கு கதை ஒழுங்கா சொல்ல வராது. அவர் ஏற்கனவே தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஸ்டார். இருந்தாலும் அது விஜய் இந்த இடத்துக்கு வருவதற்கான தொடக்கம். நான் அவருக்காக 1999 ஆம் ஆண்டு கதையை எழுதினேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement