விஜய் தரப்பில் இருந்து வந்த பதில் – விஜயுடனான படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெற்றிமாறன்

0
1464
vijay-vetrimaran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வெற்றிமாறன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. தமிழ் சினிமா உலகில் பல சாதனை படங்களை வெற்றிமாறன் கொடுத்து வருகிறார். அதிலும் தனுஷ்– வெற்றிமாறன் காம்பினேஷனில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர் ஹிட் தான். இவர் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் தாறுமாறு என்று சொல்லலாம். சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற 67 வது தேசிய திரைப்பட விருது விழாவில் வெற்றிமாறனும், தனுஷூம் அசுரன் படத்திற்காக தேசிய விருது வாங்கினார்கள்.

-விளம்பரம்-
Vijay in talks with Vetrimaran for a movie next year? - Update News 360 |  English News Online | Live News | Breaking News Online | Latest Update News

இந்நிலையில் தற்போது பிரபல பத்திரிக்கைக்கு இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தான் பணியாற்றும் படங்கள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசி இருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, சூர்யாவின் வாடிவாசல் படத்திற்கான வேலை பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கான மற்ற நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. வாடிவாசல் படம் ரொம்ப எளிமையான கதை. அத்துடன் தாயார் அற்புதம்மாளின் சுயசரிதையையும் வெப் சீரிஸ்ஸாக எடுக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். இதற்கிடையில் நடிகர் விஜயை வைத்து விரைவில் ஒரு படம் எடுக்க உள்ளேன். அதற்கு விஜய்யும் சம்மதம் தெரிவித்துவிட்டார். என்னோட லைன் அப்தான் டிலே ஆகிறது.

இதையும் பாருங்க : அழகி பட நடிகர் சின்ன பார்த்திபனா இது – என்ன படு ஸ்டைலிஷ்ஷா இருக்கார் பாருங்க. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ .

- Advertisement -

நீங்க மற்ற படங்களை முடித்து விட்டு வாங்க என்று விஜய் சார் தரப்பிலிருந்து சொல்லியிருக்கிறார். இன்னைக்கு இருக்கிற சூப்பர் ஸ்டார்களில் விஜய் சாரோட படம் பண்றதுக்கு வாய்ப்பு கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதனால் இப்ப இருக்கிற படங்களை முடித்துவிட்டு அவரோட பணம் பண்ணுவதில் ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் கூறிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன்-விஜய் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் தகவல் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

Vijay Thalapathy 65 Director Vetrimaaran? Talk of the Town Now

அதுமட்டும் இல்லாமல் வெற்றிமாறன் எழுதிய முதல் கதையே விஜய்க்கு தான். இதுகுறித்து ஏற்கனவே ஒரு பேட்டியில் வெற்றமாறன் பேசி இருந்தார். அதில் அவர், நான் முதன் முதலாக விஜய்யை வைத்து தான் கதை ஒன்று எழுதினேன். ஆனால், என்னால் கதை சொல்ல முடியவில்லை. ஏன்னா, எனக்கு கதை ஒழுங்கா சொல்ல வராது. அவர் ஏற்கனவே தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஸ்டார். இருந்தாலும் அது விஜய் இந்த இடத்துக்கு வருவதற்கான தொடக்கம். நான் அவருக்காக 1999 ஆம் ஆண்டு கதையை எழுதினேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement