‘விடாமுயற்சி’ படத்தை பாராட்டி இயக்குனர் விக்னேஷ் சிவன் போட்டிருக்கும் இன்ஸ்டா ஸ்டோரி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்தின் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று விடாமுயற்சி படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் அஜித்தின் விடாமுயற்சி படத்தை முதல் நாளிலேயே பார்த்து பாராட்டி வருகிறார்கள்.
விக்னேஷ் சிவன் பாராட்டு:
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களும் விடாமுயற்சி படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், ‘விடாமுயற்சி’ ஒரு தீவிரமான திரில்லர் படமாக உள்ளது. படத்தில் முதல் பிரேமில் இருந்து கடைசி பிரேம் வரை தொடர்ந்து அமைந்துள்ள புதிர்கள் உங்களை கவர்ந்து இழுக்கும். ஏகே சார் ஸ்கிரீன் பிரசன்ஸ் அவரது மென்மையான நடிப்பு, முழு படத்தையும் தனது தோள்களில் சுமந்து செல்லும் விதமாக உள்ளது. மேலும், எதார்த்தமான காட்சிகள், ஆபத்தான ஆக்ஷன் காட்சிகள், ரேஸ் காட்சிகள் என தனது கதாபாத்திரத்தை மிகவும் நேர்மையாக வெளிப்படுத்தி உள்ளார்.
விடாமுயற்சி குறித்து:
அதோட அஜித் நடந்து வரும் ஒவ்வொரு முறையும் விசில் அடிப்பதை யாராலும் நிறுத்த முடியாது. சில அற்புதமான காட்சிகளும் படத்திலுள்ளன. அனிருத்தின் இசையும், மகிழ் திருமேனி திரைக்கதையும் மனதை மிகவும் இறுக்கம் ஆக்குகிறது. கடினமான நிலப்பரப்பில் காட்சிகளும், அதன் நிலைத்தன்மையையும் பராமரிக்கப்பட்டுள்ள விதம் படக் குழுவின் கடின உழைப்பை காட்டுகிறது. இந்தப் படத்தை இவ்வளவு சிறப்பாகக் காட்டியதற்காக ஓம் பிரகாஷ் சார், நீரவ் சார் சாருக்கும் நன்றி. உண்மையாகவே படம் சர்வதேச தரத்தில் உள்ளது.
மிஸ் செய்த விக்கி:
மேலும், த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் மற்றும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். மகத்தான வெற்றிக்கு லைகா நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அஜித்தின் 62 வது படமாக விடாமுயற்சி உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு முன் வெளியான ‘துணிவு’ படத்துக்கு அடுத்து அஜித் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால், விக்னேஷ் சிவனை நீக்கப்பட்டு, அஜித்தின் 62 ஆவது படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நிராகரிக்கப்பட்ட காரணம்:
இதுகுறித்து விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில், நான் மலையாளத்தில் ஃபஹத் பாஸில் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘ஆவேசம்’ படம் போல் கதையை அஜித்துக்கு உருவாக்கினேன் ஆனால், தயாரிப்பாளர்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவர்களுக்கு என்று நிறைய ரூல்ஸ் வைத்திருந்தார்கள். குறிப்பாக பெரிய ஹீரோ படங்களுக்கு குறிப்பிட்ட சில விஷயங்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். எனது கதையில் பல மாஸ் தருணங்கள் இடம் பிடித்திருந்தாலும் காமெடி படம் போல் இருப்பதாக கூறினார்கள். இதனால்தான் அஜித் படம் கைநழுவி போனது என்று கூறியிருந்தார்.