தமிழில் சிம்பு நடித்த ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.அதன் பின்னர் சில படங்களை இயக்கிய இவர் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் காதலராக இருந்து வருகிறார். தற்போது இவர்கள் இருவர் தான் தமிழ் சினிமாவின் ஹாட் இளம் காதல் ஜோடிகள்.
நீண்ட காலமாக காதலித்து வரும் இவர்கள் இருவரும் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு தகாள்வகளையும் தெரிவிக்கவில்லை. இருவருமே தங்களது வேலைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்து சென்று விடுகின்றனர்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீப காலமாக நடிகை நயன்தாராவுடன் சுற்றி திரிந்த புகைப்படத்தை தான் தனது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் . இந்நிலையில் திடீரென்று விக்னேஷ் சிவனின் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
My mom's birthday ??
I wish & pray to God that he blesses her with all the strength in the world to keep her healthy, happy & smiling jus like in this picture , forever ! ??? #MyGod #MotherLove #motheristhebest #MotherAndSon pic.twitter.com/WZ3ySNWZO3
— Vignesh ShivN (@VigneshShivN) July 27, 2018
அது வேறு எதற்காகவும் இல்லை,இயக்குனர் விக்னேஷ் சிவனின் அம்மாவிற்கு இன்று (ஜூலை 27) பிறந்தநாளாம். அதானல் தனது அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பதிவை கண்ட இயக்குனர் வீக்னேஷ் சிவனின் ரசிகர்களும் அவரது அம்மாவிற்கு ட்விட்டரில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.