அரசாங்க சொத்தையே விலைக்கு கேட்டாரா நயன்தாரா கணவர்? அமைச்சரை சந்தித்தது ஏன்?

0
185
- Advertisement -

அரசாங்க இடத்தை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் நேற்று இரவு புதுச்சேரி சென்றிருந்தார். அப்போது புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்கு சென்ற விக்னேஷ் சிவன் அங்கு சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசி இருந்தார்.

-விளம்பரம்-

அப்போது விக்னேஷ் சிவன், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘சீகல்ஸ்’ ஓட்டலை விலைக்கு கேட்டிருக்கிறார். இதை கேட்ட உடனே அமைச்சர் ஒரு நிமிடம் ஷாக் ஆகி, அது அரசு சொத்து என்று சொன்னார். பின் விக்னேஷ் சிவன், ஓட்டலை ஒப்பந்த அடிப்படையில் ஆவது வாடைக்கு தருவீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அமைச்சர், புதுச்சேரி அரசினுடைய சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இந்த ஹோட்டல் இயங்கி வருகிறது.

- Advertisement -

புதுச்சேரியில் விக்னேஷ் சிவன்:

இங்கு ஏராளமான ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். அப்படி எல்லாம் ஒப்பந்த அடிப்படையில் வழங்க முடியாது என்று கூறியிருக்கிறார். உடனே விக்னேஷ் சிவன், புதுச்சேரியில் கடற்கரைப் பகுதிகள் சில தனியாரிடம் வசம் இருக்கிறது. அதில் ஏதாவது ஒன்றாவது கிடைக்குமா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அமைச்சர், புதுச்சேரியில் உள்ள பல்வேறு கடற்கரைகள் கடந்த 2017 ஆம் ஆண்டு டெண்டர் போடப்பட்டு எழுத்தின் அடிப்படையில் தனியார் இடம் ஒப்படைக்கப்பட்டது.

விக்னேஷ் சிவன் சொன்ன விஷயம்:

தற்போது அதில் எதுவும் செய்ய முடியாது என்று கூறியிருந்தார். அதற்குப்பின் விக்னேஷ் சிவன், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். கலை நிகழ்ச்சி நடத்த ஏதாவது இடம் கிடைக்குமா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அமைச்சர், புதுச்சேரி துறைமுக வளாகத்தில் பொழுதுபோக்கு மையம் ஒன்றை கட்டி வைத்திருக்கிறோம்.

-விளம்பரம்-

அமைச்சர் சொன்னது:

அங்கு ஒரே நேரத்தில் 4000 பார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். அதற்கு அரசு நிர்ணயம் செய்து உள்ள கட்டணத்தை ஜிஎஸ்டி உடன் சேர்த்து செலுத்தினாலே போதும். நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார்.
உடனே விக்னேஷ் சிவன், சம்மதம் தெரிவித்து அங்கிருந்து கிளம்பி பொழுதுபோக்கு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டு இருக்கிறார்.

கலை நிகழ்ச்சி:

மேலும், புதுச்சேரியில் கலை நிகழ்ச்சி நடத்த விக்னேஷ் சிவன் மும்முரமாக ஏற்பாடு செய்து வருகிறார். இதில் நயன்தாரா உட்பட பல நடிகர், நடிகைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது அரசாங்க இடத்தை விக்னேஷ் சிவன் கேட்ட செய்தி தான் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement