இழப்பீடா நான் பணம் கேட்கல, இத மட்டும் பண்ணுங்க போதும் – மனைவிக்காக முதல்வரிடம் உருக்கமுடன் கோரிக்கை வைத்த விக்ரமன்.

0
509
- Advertisement -

இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு ஏற்பட்டு இருக்கும் உடல் பிரச்சினை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் விக்ரமன். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருந்தார். இவருடைய படங்கள் எல்லாம் குடும்பப்பாங்கான கதை மற்றும் பெண்களின் மீதான சமூக அக்கறையை மையமாகக் கொண்டது. மேலும், இவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த புதுவசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

-விளம்பரம்-

முதல் படத்திலேயே இவர் தமிழக அரசின் சிறந்த இயக்குனர், சிறந்த படத்திற்கான விருதை தட்டி சென்றிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பெரும்புள்ளி கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக, சூரிய வம்சம், உன்னை நினைத்து, வானத்தைப்போல, பிரியமான தோழி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பல பிரபலமான நடிகர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விக்ரமன் திரைப்பயணம்:

குறிப்பாக, இதில் பூவே உனக்காக திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. அதுமட்டுமில்லாமல் சரத்குமார் நடிப்பில் வெளிவந்திருந்த சூரியவம்சம் படமும் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வசூல் சாதனையும் செய்து இருந்தது. மேலும், இவருடைய இயக்கத்தில் வந்த படங்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரட் ஆக இருக்கிறது. கடைசியாக இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான நினைத்தது யாரோ என்ற படத்தை தான் இயக்கியிருந்தார். அதற்கு பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை.

விக்ரமன் அளித்த பேட்டி:

இது குறித்து ரசிகர்கள் பலருமே கேள்வி எழுப்பினார்கள். பின் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் விக்ரமன், என்னுடைய மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இதனால் தான் நான் படங்களை இயக்கவில்லை என்று கூறியிருந்தார். இதனை அடுத்து பலருமே விக்ரமனின் மனைவிக்கு என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார்கள். இந்த நிலையில் தற்போது விக்ரமனின் மனைவிக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

விக்ரமனின் மனைவி குறித்த தகவல்:

விக்ரமனின் மனைவி பெயர் ஜெயப்பிரியா. இவர் குச்சிப்புடி நடன கலைஞர். இவர் இதுவரை சுமார் 4000 மேடைகளில் நடனம் ஆடி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு உடலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் இவருக்கு சிகிச்சை அளித்தார்கள். ஆனால், அளிக்கப்பட்ட சிகிச்சை(medical error) தவறாக கொடுக்கப்பட்டது. இதனால் ஐந்து வருடங்களுக்கு மேல் விக்ரமனின் மனைவி ஜெயபிரியா படுத்த படுக்கையாக இருந்தார். அவரால் தன்னுடைய வேலையை கூட செய்ய முடியாத நிலைமைக்கு போனார்.

விக்ரமன் பேட்டி :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விக்ரமன் இது முழுக்க முழுக்க மருத்துவர்கள் செய்த தவறுதான் இதுபோல பல மருத்துவமனைகளில் நடக்கிறது ஆனால் என்ன செய்ய முடியும் என் மனைவி ஒரு மாதத்தில் பழையபடி நடனம் ஆடுவார் என்று சொன்னார்கள் ஆனால் தற்போது அவள் நடக்க முடியாமல் இருக்கிறாள். இழப்பீடா நான் பணம் கேட்கல, ஆனால், என் மனைவியை எப்படி நான் மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனானோ அந்த மாதிரி பண்ணி கொடுத்தா போதும்’ என்று உருக்கமுடன் பேசியுள்ளார்.

Advertisement