விஜயகாந்த் கூட இப்படி சொன்னது இல்லனு விஜய் கிட்ட சொன்னேன் – உன்னை நினைத்து படத்தில் இருந்து விஜய் விலகிய காரணம் குறித்து விக்ரமன்.

0
12536
Vijay
- Advertisement -

தனது ஆரம்ப காலத்தில் விஜய் ஹீரோவாக நடித்த பல படங்கள் தோல்வியில் தான் முடிந்தது. அந்த சமயத்தில் தான் தனது அப்பா மற்றும் இயக்குனர் சந்திரசேகரை விட்டு விக்ரமன் இயக்கத்தில் வந்த ‘பூவே உனக்காக’ படத்தில் நடித்தார் விஜய். இந்த திரைப்படம் தான் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய திருப்பு முனை படமாக அமைந்து இருந்தது. இந்த படத்திற்கு முன்பு வரை விஜய்க்கு இளசுகள் மட்டும் தான் ரசிகர்களாக இருந்தார். ஆனால், இந்த படத்திற்கு பின் தான் விஜய்க்கு பேமிலி ஆடியன்ஸ் கூடியது.

-விளம்பரம்-
Ilayathalapathi Vijay in Unnai Ninaithu with Laila | Vikraman Movie

பூவே உனக்காக படத்திற்கு பின் தான் விஜய்க்கு அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்து இருந்தது. ஆனால், பூவே உனக்காக படத்திற்கு பின்னர் விஜய், விக்ரமனுடன் இனையவில்லை. ஆனால், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த ‘உன்னை நினைத்து ‘ படத்தில் முதலில் விஜய் தான் நடித்துள்ளார். அதன் பின்னர் தான் சூர்யா இந்த படத்தில் நடித்தார்.

இதையும் பாருங்க : அவளுக்காக Pray பண்ணுங்க – யாஷிகாவின் தற்போதைய நிலை குறித்து கூறிய யாஷிகாவின் தங்கை.

- Advertisement -

2002 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் சூர்யாவிற்கு ஒரு நல்ல திருப்பு முனை படமாக அமைந்து இருந்தது. இந்த படத்தில் லைலா, ஸ்னேகா என்று இரண்டு நாயகிகள் நடித்து இருந்தனர். இதில் நடிகர் விஜய், லைலாவுடன் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் கூட வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் விஜய் ஏன் இந்த படத்தில் இருந்து விலகினார் என்பதை இயக்குனர் விக்ரமன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய விக்ரமன், இந்த படத்தின் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டு விட்டது. ஆனால், விஜய்க்கு இந்த படத்தின் கிளைமாக்ஸ்ஸில் உடன் பாடு இல்லை. அதனால் கிளைமாக்ஸ்ஸை மாற்ற சொன்னார். ஆனால், என் படங்களில் நான் என்ன நினைக்கிறேனோ அத தான் எடுப்பேன். விஜயகாந்த் கூட படம் பண்ணிட்டேன் அவர் ஒரு வார்த்த கூட கேக்கல. அதனால் உங்களுக்காக படத்தின் கதையை மாற்ற முடியாது என்று கூறிவிட்டதாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement