படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து முதன்முதலாக விளக்கம் கொடுத்த இயக்குனர் வினோத்- வைரலாகும் வீடியோ

0
276
- Advertisement -

இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் கடந்த மாதம் ரிலீசானது. அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள்.

-விளம்பரம்-

இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது படத்தின் மீதி கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஸ்டண்ட் காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் வலிமை திரைப்படம் தமிழகத்தில் இதுவரை 900க்கும் மேல் திரையரங்களில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

வலிமை படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்:

மேலும், வலிமை படம் வெளியாகி வசூலில் சாதனை புரிந்து வந்தாலும் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள். படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்களும், சினிமா விமர்சனம் தொடர்ந்து தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் இரண்டு மணி நேரம் 55 நிமிடத்தில் ஓடும் வலிமை படத்திலிருந்து 14 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு புதிய வெர்ஷன் வலிமை திரையரங்களில் வெளியானது. அதோடு படத்தில் இடம் பெறாத மூன்று நிமிட காட்சி வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியானது.

அகில இந்திய வானொலி சேனலுக்கு வினோத் அளித்த பேட்டி:

இந்நிலையில் வினோத் குமார் அவர்கள் சமீபத்தில் வலிமை படம் குறித்து அகில இந்திய வானொலி சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் நீக்கப்பட்ட காட்சி குறித்து கூறி இருப்பது, மங்காத்தா, பில்லா போன்ற படங்களை விரும்பும் அஜித் ரசிகர்கள் உள்ளனர். குடும்ப பார்வையாளர் ரசிகர்கள் உள்ளார்கள். தாய்-மகன் கோணம் என அனைத்து வகையான ரசிகர்களும் விரும்பும் வகையில் மட்டுமே வலிமை படம் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், முதல் பாதியை பார்த்தபிறகு அதன் திரைக்கதை வேகமாகவும் மிருதுவாக இருந்தது.

-விளம்பரம்-

படத்தில் நீக்கப்பட்ட காட்சி குறித்து வினோத் சொன்னது:

ஆனால், முதல் பாதியை பார்க்கும் மனநிலையில் இரண்டாம் பாதியில் பார்வையாளர்கள் இல்லை என்பது தெரிந்தது. முதல் பாதி போலவே இரண்டாம் பாதியிலும் வேகமான திரைக்கதையை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அதற்குப் பிறகு தான் பேக் டு பேக் சண்டைகளுக்கு இடையில் சில நிமிட காட்சிகளை நீக்கி மீட்டர் கச்சிதமாக வைக்கப்பட்டது. பின் நீக்கப்பட்ட காட்சிகளை யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தோம். இந்த காட்சிகள் வெளியானது தொடர்ந்து ஏன் இவ்வளவு நல்ல காட்சிகளை நீக்கி விட்டிர்கள் என்று பல பேர் கேட்டிருக்கிறார்கள்.

ஏகே 61 படம் பற்றிய தகவல்:

மேலும், படத்தை பார்த்துவிட்டு திரைக்கதையில் எந்த தொய்வும் இல்லை என்ற முடிவுக்கு வந்த பிறகு தான் படத்தை வெளியிட முடிவு செய்தோம். நாங்கள் தயாரித்த படத்தை மக்கள் பார்க்கவில்லை. அவர்களின் விமர்சனத்திற்கான பின்னூட்டத்தை நாங்கள் பரிசிலளித்து சில காட்சிகளை எடுத்தோம் என்று கூறினார். இப்படி வினோத் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். அதோடு இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Advertisement