விசுவின் பெரும்பாலான படங்களில் உமா என்ற கதாபாத்திரம் இல்லாமல் இருக்காது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் விசு. விசு அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, தொகுப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர். . இவர் கடைசியாக தங்கமணி ரங்கமணி என்ற படத்தை இயக்கி உள்ளார். இவர் சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் உள்ளார். வயது முதிர்ச்சி காரணமாக விசு கடந்த சில வருடங்களாக டயாலிசிஸ் செய்து வந்ததாலும் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
வாரத்துக்கு 2 முறை டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தவருக்கு, 3 முறை செய்யக் கூடிய சூழல் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை கடந்த 10 நாட்களாகவே மோசமடைந்து இருந்ததால் கடந்த மார்ச் 22 ஆம் தேதி மாலை சிறுநீரகப் பிரச்னை காரணமாக நடிகர் விசு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விசு அவர்கள் 1945 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் முழு பெயர் எம் ஆர் விஸ்வநாதன் ஆகும்.இவர் முதன் முதலில் இயக்குனர் பாலச்சந்திரனிடம் தான் துணை இயக்குனராக பணிபுரிந்தார்.
விசுவின் மனைவி :
விசு கடந்த 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு லாவண்யா, சங்கீதா , கல்பனா என்று மூன்று மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இறப்பதற்கு முன்பாக விசு பேட்டியின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் தொகுப்பாளர் ஒருவர் நீங்கள் உங்களுடைய எல்லா படத்திற்கும் உமா என்று பெயர் வைத்து உள்ளீர்கள். உங்களுடைய மனைவி பெயர் என்பதால் வைத்திர்களா? இல்லை வேற எதாவது காரணம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பி எழுப்பினார்.
உமா என்ற பெயர் மீது அப்படி என்ன பாசம் :
அதற்கு விசு அவர்கள் கூறியது, உமா என்பது என்னுடைய மனைவி பெயர் கிடையாது. நான் முதல்ல டிராவலிங்களில் இருந்தேன். அப்போது முப்பது, நாற்பது பெண்மணிகளோடு ஸ்ரீலங்கா பயணம் செய்தோன். அங்கு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது நான் ரூமுக்கு வெளியில் உட்கார்ந்து என்னுடைய முதல் கதை எழுதினேன். அங்கிருந்த டீச்சர்களில் ஒருவர் தான் உமா. அவர் என்னை பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.
விசுவிடம் கதை கேட்ட ஆசிரியை :
நானும் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினேன். சரி சொல்லுங்கள் உங்கள் கதையை என்று கூறினார். நானும் அப்போது என் கதையை கேட்க யாரும் இருக்க மாட்டார்களா என்று நினைத்தது உண்டு. பின் அவர்களிடம் என் கதையைக் கூற கூற அவர் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. நீங்கள் இங்க இருக்க வேண்டிய ஆளே கிடையாது. இவ்வளவு அற்புதமாக கதையை எழுதி உள்ளீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பெரிய ஆளாக வருவீர்கள் என்று கூறினார்.
விசு எடுத்த முடிவு :
அப்போது தான் நான் முடிவெடுத்தேன் என்னுடைய எல்லா படத்திற்கும் உமா என்று பெயரை வைக்க வேண்டும்.உண்மையிலேயே அவர்கள் மாறி ஒரு உன்னதமான நேர்மையான ஆசிரியரை நான் பார்த்தது கிடையாது. அது மட்டுமில்லாமல் என்னுடைய மனைவி பெயர் உமா கிடையாது. அவர் பெயர் சுந்தரி. பொய் கதாநாயகிகளுக்கு மட்டும் தான் உமா பெயர் வைக்க வேண்டுமா? என்னுடைய உண்மை கதாநாயகிக்கு ஏன் வைக்க கூடாது என்று தான் அவருடைய பெயரை உமா என்று வைத்தேன். இது குறித்து என் மனைவியும் எதுவும் கூறாமல் சரி என்று ஒத்துக் கொண்டார்.