அஜித்தின் அடுத்த பட கால் ஷிட்டுக்காக போட்டி போடும் மூன்று இயக்குனர்கள் யார் தெரியுமா ?

0
2656
Ajith
- Advertisement -

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளிவந்த படம் விவேகம் . இதில் அஜித் தனது உழைப்பை அதிகமாகவே போட்டு இருந்தார் .
Ajith kumarஆனால் எதிர் பார்த்த ரிசல்ட் வராததால் அஜித் மற்றும் படக்குழு சற்று அப்செட் தான் . பிறகு தன் குடும்பத்துடன் லண்டன் பறந்து ஓய்வு எடுத்து வருவதாக ஒரு செய்தி வெளிவந்தது.

இல்லை, அஜித் தற்போது சென்னையில் தான் ஓய்வெடுத்து வருகின்றார் என்றும் சில செய்திகள் உலா வருகின்றது. எது உண்மை என்று தெரியவில்லை.
இந்த ஓய்விர்கு பின் அடுத்த படத்திற்கான கதைகளை கேட்க திட்டமிட்டுள்ளாராம்.

இங்கு மூன்று இயக்குனர்கள் அவருக்கு கதை சொல்ல வெய்டிங். அவர்கள் கே.வி.ஆனந்த், விஷ்ணுவர்தன், சிவா இதில் அஜித் யாரை தேர்ந்தெடுக்கின்றாரோ, அவர்கள் தான் அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர், டிசம்பர் மாதம் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Advertisement