பிரபல இயக்குனரும் நடிகருமான மகேந்திரன் இன்று (ஏப்ரில் 2) காலமாகியுள்ள செய்தி திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம் உள்பட பல படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார் இயக்குனர் மகேந்திரன். ரஜினிகாந்தின் காளி, விஜயகாந்தின் கள்ளழகர் உள்பட 26 படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.

அதன்பின் ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர்  ஜானி, கைக கொடுக்கும் கை  உள்ளிட்ட படங்களை இயக்கினார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, ரஜினியின் பேட்ட, விஜய்சேதுபதியின் சீதக்காதி, பூமராங், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

கடந்த சில நாட்களாக சிறு நீராக கோளாறு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்த மகேந்திரன் இன்று காலை காலமானார். மகேந்திரன் பல்வேறு நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். மேலும், அஜித்தை வைத்தும் கூட ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்துள்ளார்.

இயக்குனர் மகேந்திரன் அஜித்தை வைத்து ஒரு விளையாட்டு சம்மந்தபட்ட கதையை எடுக்க திட்டமியிருந்தாராம். அந்த படத்தில் நடிகர் அஜித் ஒரு கூடைப்பந்து வீரராக நடிக்க இருந்தாராம். ஆனால், கடைசி வரை அந்த படம் கை கூடாமல் போய்விட்டது துரதிர்ஸ்ட்டமான ஒரு விஷயம் தான்.

Advertisement
Advertisement