பிளடி பெக்கர் பட நஷ்டம் குறித்து விநியோகஸ்தர் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கவின் வளர்ந்து இருக்கிறார். கடைசியாக இவர் நடித்த டாடா படம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. இதை அடுத்து சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் பிளடி பெக்கர். இந்த படத்தை படம் நெல்சன் தயாரித்திருந்தார்.

இந்த படத்தை நெல்சனிடம் உதவி இயக்குனராக இருந்த சிவபாலன் முத்துகுமார் என்பவர் தான் இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகி இருந்த பிளடி பெக்கர் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.
பிளடி பெக்கர் படம்
அதோடு இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் ரிலீசின் போது ஜெயம் ரவி நடித்த பிரதர், சிவகார்த்திகேயன் அமரன் படம் வெளியாகியிருந்தது. இதில் அமரன் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனை செய்து இருக்கிறது. இதனால் பிரதர் மற்றும் பிளடி பெக்கர் ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. மேலும், ப்ளடி பெக்கர் படத்தினுடைய தமிழக உரிமையை 5 ஸ்டார் செந்தில் வாங்கி 11 கோடிக்கு வாங்கி விநியோகம் செய்து இருந்தார்.

நெல்சன் செய்த செயல்:
படம் பெரிய எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் செந்திலுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதோடு ஒப்பந்தப்படி விநியோகம் பணம் வாபஸ் கொடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப் படத்தின் மூலம் தமிழகத்தில் பைவ் ஸ்டார் செந்திலுக்கு 4 கோடி மட்டுமே கிடைத்திருக்கிறது. சுமார் 7 கோடி வரை அவர் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் நெல்சன் அவர்கள் செந்திலை சந்தித்து, நஷ்ட தொகையில் சுமார் 5 கோடியை திருப்பி தருவதாக உறுதியும் அளித்திருந்தார். அதோட டிஜிட்டல் உள்ளிட்ட மற்ற உரிமைகளில் அவருக்கு லாபம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

விநியோகஸ்தர் பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக பிளடி பெக்கர் படத்தினுடைய விநியோகஸ்தர் அளித்த பேட்டியில், வந்த தகவல் எல்லாம் உண்மைதான். இந்த படத்தை மினிமம் கேரண்டி அடிப்படையில்தான் வாங்கி இருந்தோம். இந்த முறையில் படத்தை வாங்கினால் தயாரிப்பாளரிடம் நஷ்டத்தை கேட்க முடியாது. அதேபோல விநியோகஸ்தருக்கு லாபம் வந்தாலும் அதை தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டியதில்லை. இதுதான் எம் ஜி முறை. அதன் அடிப்படையில் தான் படத்தை வாங்கினோம். படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே எங்களுக்கு படத்தால் நஷ்டம் ஏற்பட்டது நெல்சனுக்கு தெரிய வந்தது. என்னை நம்பி தான் நீங்கள் இந்த படத்தை வாங்கினீர்கள்.

நெல்சன் குறித்து சொன்னது:
அதனால் உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் முழுவதையும் திருப்பி தந்து விடுகிறேன் என்று நெல்சன் சொன்னார். இதை நாங்கள் கொஞ்சமுமே எதிர்பார்க்கவில்லை. பின் நாங்கள், இன்னும் சில வாரங்கள் படம் ஓடட்டும். அதற்குப் பிறகு நஷ்டம் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் நெல்சன் தான் சொன்னபடியே நஷ்டத்தை ஈடு செய்தார். 100% அவர் பணம் திருப்பிக் கொடுக்க தயாராக இருந்தார். ஆனால், நாங்கள் அவ்வளவு வேண்டாம். 85 சதவீதம் போதும் என்று சொன்னோம். அவரும் கிட்டத்தட்ட ஆறு கோடியை திருப்பிக் கொடுத்து விட்டார். தன்னை நம்பி படத்தை வாங்கியவர்கள் நஷ்டப்படக்கூடாது என்று நினைக்கும் அவரைப் போன்றவர்களால் தான் தமிழ் சினிமா இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்ற நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.






