சமீப காலமாக நடிகைகள் பலரும் சர்வ சாதாரணமாக நீச்சல் உடை புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அதிலும் சமீபத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான பல இளம் நடிகைகளும் சமீப காலமாக மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று அங்கே நீச்சல் உடை புகைப்படங்களை அள்ளி வீசி வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இளசுகளை கவர்ந்த திவ்ய பாரதியும் நீச்சல் உடை புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். தமிழ் சினிமா உலகில் ரசிகர்களின் கிரஸ்ஸாக திகழ்பவர் திவ்ய பாரதி. இவர் பிரபல மாடல் ஆவார். இதன் மூலம் தான் இவருக்கு சினிமா பட வாய்ப்பு கிடைத்தது.
சமீபத்தில் திவ்யா பாரதி நடிப்பில் வெளிவந்த படம் ‘பேச்சுலர் ‘. இந்த படத்தை இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் ஜி வி பிரகாஷ், முனிஸ்காந்த், பகவதி பெருமாள் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மற்றும் ஜான் லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்திருக்கிறார்கள்.
பேச்சுலர்களை கவர்ந்த திவ்ய பாரதி :
இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் ஜி வி பிரகாஷுக்கு ஜோடியாக திவ்யா பாரதி நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் தான் திவ்ய பாரதி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் முதல் படத்தின் மூலம் இன்றைய இளைஞர்களின் மனதை கவர்ந்து இருக்கிறார் என்று சொல்லலாம். மேலும், இந்த படத்தை தொடர்ந்து திவ்யபாரதி அவர்கள் மதில் மேல் காதல் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
திவ்ய பாரதியின் அடுத்த படம் :
இந்த படத்தை இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக முகென் நடித்திருக்கிறார். மேலும், திவ்ய பாரதி நடிக்கும் மதில் மேல் காதல் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், நிழல்கள் ரவி, அனுஹாசன், சுப்பு பஞ்சு என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் மே மாதம் திரைக்கு வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீச்சல் உடை புகைப்படங்கள் :
இப்படி பிரபல மாடல் ஆன திவ்யா இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர். மாடல் ஆக இருந்ததால் இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் சமீபத்தில் இவர் மாலத்தீவிற்கு சுற்றுல்லா சென்று இருந்தார். அங்கே பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை அள்ளி வீசினார். இப்படி ஒரு நிலையில் இந்த புகைடபங்களுக்கு சில பெண்கள் இவருக்கு அனுப்பிய மெசேஜ்களை பகிர்ந்து இருக்கிறார்.
ரசிகைகள் அனுப்பிய மெசேஜ் :
நெகிழ்ச்சியடைந்த திவ்ய பாரதி :
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், உலகில் பல நேர்மறைகள் உள்ளன, நமக்கு எது நல்லது என்பதை எடுத்துக் கொள்வதும், மீதமுள்ளவற்றைப் புறக்கணிப்பதும் நம் கையில் உள்ளது. மிகவும் அன்புடனும் ஆதரவுடனும் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பும் இந்த பெண்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது, பெண்களே நீங்கள் உண்மையான தேவதைகள் மற்றும் உங்கள் அனைவரையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.