பிரபல நடிகர் சத்யராஜின் மகள், திவ்யா சத்யராஜ் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. ‘கட்டப்பா’ என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டவர் சத்யராஜ். ‘கடலோர கவிதைகள்’ என்ற படத்தின் மூலம்தான் இவர்கள் சினிமா உலகில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தார். அதை தொடர்ந்து இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து இருந்தார்.
மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் ஆரம்பத்தில் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தார். தற்போதும் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பழமொழி படங்களில் நடித்திருக்கிறார்.
சத்யராஜ் குறித்த தகவல்:
கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘ தோழர் சேகுவரா’ . சத்யராஜ் உடன் இணைந்து நாஞ்சில், ராஜேந்திரன், கூல் சுரேஷ், நீல் ஆனந்த், அனீஸ் உட்பட பல நடிகர்கள் நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது சத்யராஜ் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் இன்னும் சில படங்களில் அவர் கமிட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்யராஜ் குடும்பம்:
மேலும், சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபிராஜ் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், திவ்யா அப்படி இல்லை. இவர் சிறு வயதில் படங்களில் நடிக்க ஆசைப்பட்டாலும், பின்னர் வேறு துறைக்கு மாறிவிட்டார். தனது அப்பாவை போலவே இவரும் ஒரு நாத்திகவாதி. இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிஷனிஸ்ட்களில் ஒருவராக சத்யராஜ் மகள் திவ்யா இருக்கிறார். நியூட்ரிஷியன் துறையில் எம். ஃபில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் நியூட்ரிஷன் துறையில் பல கான்ஃபரன்ஸ்களும் நடத்தியுள்ளார்.
திவ்யா பதிவு:
தற்போது சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் திவ்யா அடிக்கடி ஊட்டசத்துக் குறித்தும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தனது தந்தை மற்றும் தாய் குறித்து திவ்யா சத்யராஜ் போட்டு இருக்கும் பதிவு தான் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், என் தந்தை பெரியார்: என் அம்மா 4 வருஷமாக கோமாவில் இருக்கிறார். அவங்களுக்கு PEG மூலம் தான் உணவளிக்கிறோம். இதனால் முற்றிலும் நாங்கள் உடைந்து போனோம். ஆனால், நம்பிக்கையோடு மருத்துவ முன்னேற்றத்திற்காக காத்திருப்போம்.
சிங்கிள் மாம்ஸ் கிளப்பை உருவாக்குகிறோம்:
நாங்கள் அம்மாவை மீட்டெடுப்போம் என்பது எங்களுக்கு தெரியும். அப்பா நாலு வருஷமாக சிங்கிள் பேரண்டாக இருக்கிறார். அப்பாவின் அம்மா சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இப்போது நானும் என் அப்பாவுக்கு ஒரு அம்மாவாக இருக்கிறேன். அப்பாவும் நானும் ஒரு சக்தி வாய்ந்த சிங்கிள் மாம்ஸ் கிளப்பை உருவாக்குகிறோம் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் பதிவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியாகி, சத்யராஜ் சார் இப்படி ஒரு கஷ்டத்தில் இருப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை. விரைவில் உங்க அம்மா குணமடைவார்கள் என்று திவ்யா சத்யராஜுக்கு ஆறுதலாக பதிவிட்டு வருகிறார்கள்.