சனாதனம் பற்றிய கஸ்தூரியின் நேர்காணலைப் பார்த்தேன் – பதிலடி கொடுத்த சத்யராஜ் மகள்.

0
972
- Advertisement -

சனாதனத்திற்கு ஆதரவாக பேசிய கஸ்தூரிக்கு நடிகர் சத்யராஜின் மகள் பதிலடி கொடுத்திருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் உதயநிதியின் சனாதன கருத்து தான் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் தர்மாவை ஒழிக்க வேண்டும். சிலவற்றை நாம் எதிர்க்க கூடாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா அதை எல்லாம் ஒழிக்க தான் வேண்டும்.

-விளம்பரம்-

அது போல தான் இந்த சனாதனமும். சனாதனத்தை ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம் என்றால் என்ன அதன் பெயரே சமஸ்கிருததில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனத்திற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையானது மாற்ற முடியாதது, யாரும் கேள்வி கேட்க முடியாது என்று அர்த்தம். எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்க வேண்டும் என்பது தான் இந்த கமினியூஸ்ட் இயக்கமும் இந்த திமுக இயக்கமும்.

- Advertisement -

சனாதனம்:

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கேலி செய்யும் வகையில் ஒரு செய்தி தாளில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. அதற்க்கு நம்முடைய முதல்வர் சமூக வலைதளங்களில் பதில் பதிவு செய்து இருந்தார். தமிழகத்தில் மாற்றகூடதாது எதுவும் இல்லை என்று மாற்றி காட்டியவர் தான் முத்தமிழ் என்ற கலைஞர் கருணாநிதி. பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது. கணவனை இழந்த பெண்களுக்கு உடன் கட்டை ஏற வைத்தது.

உதயநிதி கருத்து சர்ச்சை:

திராவிட அரசு மக்களை முன்னோக்கி அழைத்து செல்கிறது. ஆனால், ஒன்றிய அரசு மக்களை பின்னோக்கி அழைத்து செல்கிறது என்று அமைச்சர் உதயநிதி கூறியிருந்தார். அமைச்சர் உதயநிதியின் இந்த சனாதன பேச்சுக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றார்கள். அது மட்டும் இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு பத்து கோடி ரூபாய் விலை என்று சிலர் அறிவித்திருந்தார்கள். மேலும், பல இடங்களில் உதயநிதியின் உருவப்படங்களும் எரிக்கப்பட்டது. அவர் மீது வழக்குகளும் தொடர்ந்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

கஸ்தூரி கருத்து :

இதனை கண்டித்து பல தலைவர்கள் கருத்து கூறி வந்தார்கள். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி சனாதனத்திற்கு ஆதரவாக பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். இந்நிலையில் இதை பார்த்த சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் கஸ்தூரியின் பேட்டியை விமர்சித்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர் சனாதனம் பற்றிய கஸ்தூரியின் நேர்காணலைப் பார்த்தேன். அதில் அவர் ஒரு மத வெறியராகத் தோன்றினார்.

சத்யராஜ் மகள் பதிலடி :

சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்கு எதிரானது என்பதால் நான் சனாதனத்தை எதிர்க்கிறேன் என்று கூறி இருக்கிறார். அதே சமயம் உதயநிதி மற்றும் ஆர் ராசாவின் கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி ட்விட்டர் போட்டு இருந்தார். அதில் அவர், இளவரசருக்கு டெங்கு, கொரோனா. ராஜாவுக்கு எய்ட்ஸ் தொழுநோய். பொருத்தம் தான். அட, மாநாடு வேணாம்யா திராவிடிய விழுதுகள் ஊழல் அழிப்பு, பலதாரமணம் எதிர்ப்பு , லஞ்ச ஒழிப்பு என்று ஒரு சின்ன கூட்டமாவது போடுவார்களா? ஹூம் . பிடிக்காத விஷயத்தை தானே எதிர்க்க முடியும் என்று கிண்டலாக விமர்சித்து பேசி இருக்கிறார்.

Advertisement