தவெக தலைவர் விஜயை விமர்சித்து சத்யராஜின் மகள் திவ்யா பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் சத்யராஜ். இவர் ‘கட்டப்பா’ என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டவர். ‘கடலோர கவிதைகள்’ என்ற படத்தின் மூலம் தான் இவர்கள் சினிமா உலகில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தார். அதை தொடர்ந்து இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து இருந்தார்.
மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபிராஜ் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், திவ்யா அப்படி இல்லை. இவர் சிறு வயதில் படங்களில் நடிக்க ஆசைப்பட்டாலும், பின்னர் வேறு துறைக்கு மாறிவிட்டார். தனது அப்பாவை போலவே இவரும் ஒரு நாத்திகவாதி.
திவ்யா சத்யராஜ் குறித்த தகவல்:
இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிஷனிஸ்ட்களில் ஒருவராக சத்யராஜ் மகள் திவ்யா இருக்கிறார். இவர் நியூட்ரிஷியன் துறையில் எம். ஃபில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் நியூட்ரிஷன் துறையில் பல கான்ஃபரன்ஸ்களும் நடத்தி இருக்கிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் திவ்யா அடிக்கடி ஊட்டசத்துக் குறித்தும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பதிவிட்டு வருகிறார். பின் சமீபத்தில் தான் இவர் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் திவ்யா:
மேலும், கட்சியில் இணைந்த உடனே இவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் திமுகவில் இணைந்த பிறகு முதன்முறையாக அரசியல் மேடையில் திவ்யா சத்யராஜ் பேசி இருக்கிறார். அதில் அவர், உதயநிதி ஸ்டாலின் சார் ஏசி கேரவனில் உட்கார்ந்து கொண்டு சொகுசு வானத்தில் பிரெண்டு கூட ஃபிரண்ட் திருமணத்துக்கு போகும் ஒரு போலி அரசியல்வாதி கிடையாது. அவர் ஒரு கடினமான உழைப்பாளி. மழை வந்தாலும் வெள்ளம் வந்தாலும் நமக்காக இறங்கி வேலை செய்வார்.
விஜயை விமர்சித்த திவ்யா:
பாஜக அரசிடம் இருந்து தமிழ்நாட்டை காக்க வந்த மாமன்னன் தான் உதயநிதி. அவர் எதிர்த்து யார் நின்றாலும் டெபாசிட் போய்விடும். அவர் ஒரு வீழ்த்த முடியாத ஹீரோ. நான் கல்லூரியில் படிக்கும்போதே ஆசை. எல்லோரிடமே நீங்கள் யாருடைய ரசிகை என்று கேட்பார்கள். நான் கலைஞர் ஐயாவின் ரசிகை என்றுதான் பெருமையாக சொன்னேன். இன்று ஒரு பெண்ணாக இங்கு நின்று பேசுகிறேன் என்றால் அந்த தைரியம் எனக்குள் வந்ததற்கு காரணம் கலைஞர் ஐயா தான்.
விஜய் குறித்த தகவல்:
அப்பா காசில் வாழாமல் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்ற தைரியமும் வந்ததற்கு கலைஞர் தான் காரணம் என்று விஜய்யை விமர்சித்தும், விஜய் போலி அரசியல்வாதி என்றும் திவ்யா பேசி இருந்தார். இதற்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். தற்போது இவர் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து இவர் முழுநேர அரசியலில் ஈடுபட இருக்கிறார்.