அதுக்கெல்லாம் வேற ஆள பாருங்க – குத்து ரம்யா .! இயக்குனர் அப்படி என்ன கேட்டார்.!

0
939
Kuthu-ramya
- Advertisement -

கடந்த 2004 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த குத்து படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா. அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘பொல்லாதவன் ‘படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-
Image result for divya spandana

கர்நாடக மாவட்டம் பெங்களூரில் கடந்த 1982ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய குடும்பம் ஒரு காங்கிரஸ் கட்சியின் அரசியல் பின்புலம் கொண்ட குடும்பம் ஆகும். அம்மா ரஞ்சிதா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவருடைய தாத்தா எஸ்.எம் கிருஷ்ணா இந்தியாவின் ஒரு மூத்த அரசியல் தலைவர் மற்றும் ஆளுநராக பணியாற்றியவர் ஆவார்.

- Advertisement -

கர்நாடக காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவராக இருக்கும் திவ்யா, மாண்டியா பாராளுமன்ற தொகுதியின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திவ்யா பாரதிய ஜனதா கட்சியை மிக நூதனமாகவும் மக்களுக்கு எளிதில் சென்று சேரும் வகையில் விமர்சனம் செய்கிறார். ஒரு பக்கம் சினிமாவிலும் நடித்து வருகிறார்.

தற்போது தில் கா ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகன்,நடிகை ரம்யாவின் கன்னத்தில் அறைவது போன்று காட்சி இருந்தது. அதை கேட்டவுடன் அறை எல்லாம் வாங்க முடியாது. காட்சியை உடனே மாற்றுங்கள். இதுபோன்ற காட்சிகளில் எல்லாம் நடிக்க முடியாது என்று ஸ்ட்ரீட்டாக சொல்லி விட்டாராம்.

-விளம்பரம்-
Advertisement