சீரியல் நடிகர்களான திவ்யா ஸ்ரீதர் மற்றும் கிரிஷ் வேணுகோபால் திருமணம் செய்திருக்கும் விஷயம் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மலையாள நடிகை திவ்யா ஸ்ரீதர் தனது 18 வது வயதில் ‘கண்டெக்டர்’ என்ற படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட இவர் சில காலம் நடிப்பில் இருந்து விலகி இருந்தார். இவருக்கு தேவானந்த் என்ற மகனும், மாயா என்ற மகளும் இருக்கும் நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
அதனைத் தொடர்ந்து திவ்யா மீண்டும் சின்னத்திரையில் பிஸியான நடிகையாக மாறி பல சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகை திவ்யா ஸ்ரீதர் தன்னுடன் ‘பத்திரமாட்டு’ தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த கிரிஷ் வேணுகோபாலை இரண்டாவதாக திருமணம் செய்து உள்ளார். இவர்களது திருமணம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நடந்துள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இரண்டாவது திருமணம்:
நீங்க வெண் தாடியுடன் இருக்கும் கிரிஷ் வேணுகோபால் மணமேடையில் திவ்யா ஸ்ரீதருக்கு தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை அடுத்து அவர்களின் வயது உள்ளிட்ட விஷயங்களைக் கூறி சமூக வலைத்தளங்களில் சிலர் கிண்டல் செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதனால், மனம் நொந்த நடிகை திவ்யா ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் மிகவும் வருத்தப்பட்டு பேசியுள்ளார்.
திவ்யா ஸ்ரீதர் சொன்னது:
அதில் அவர், நான்கு பேருக்கு அறிவித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டோம். ஆனால், பலரது கமென்ட்டுகள் பாசிட்டிவானதாக இல்லை. எதற்காக பலரும் இப்படி சொல்கிறார்கள் என எங்களுக்குத் தோன்றியது. திருமணம் செய்வது அவ்வளவு பெரிய தப்பா என்ன?. எங்கள் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு தான் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்தோம்.
மோசமான கமென்டுகள் குறித்து திவ்யா:
அவர்களுடைய வாழ்க்கை அப்படி ஆனதால் அவர்கள் இதுபோன்று பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் திருமணம் செய்து கொண்டால் கமென்ட்டுகள் வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இவ்வளவு மோசமாக கமென்டுகள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் திருமணம் செய்து கொண்டது செக்ஸுக்காக இல்லை. என்னுடைய பிள்ளைகள் பாதுகாப்பாக வளர வேண்டும். அவர்களுக்கு ஒரு தந்தை வேண்டும். என் கணவர் என கூறுவதற்கு எனக்கு ஒரு அடையாளம் வேண்டும் என்பதற்காகத்தான்.
பேசுபவர்கள் பேசிக்கொள்ளட்டும்:
வாழ்க்கையில் செக்ஸ் என்பது ஒரு பகுதிதான். 60 வயது ஆனவர் 40 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். ஆனால், அவருக்கு 49 வயதும், எனக்கு 40 வயதும் ஆகிறது. இனி எங்கள் வயதைப் பற்றி தவறாக பேசுபவர்கள் பேசிக்கொள்ளட்டும். ஆயிரம் குடங்களின் வாயை அடைக்க முடியும். ஆனால், ஒரு மனிதனின் வாயை அடைக்க முடியாது. நமது சமூகம் இப்படித்தான் இருக்கும். அதனால் தான் நாடு நல்லபடி ஆகாமல் உள்ளது என்று கூறியுள்ளார்.