‘இந்த பாவம்லா உன்ன சும்மா விடாது’ – குழந்தை பிறந்ததை அறிவித்த திவ்யாவின் பதிவில் அர்னவ்வை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

0
841
Arnav
- Advertisement -

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. கடந்த ஆண்டு சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருந்தது அர்னவ்-திவ்யா விவகாரம் தான். இவங்க வேற யாரும் இல்லைங்க, செல்லம்மா சீரியல் நடிகர் ஆர்னவ், செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து இருந்தார்கள்.பின் கடந்த ஆண்டு தான் ரகசியமாக திருமணம் செய்து இருந்தனர். இவர்கள் இருவரும் இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அதோடு இதற்கு முன்பே திவ்யாவிற்கு திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கிறார். இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? அவர் யார்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. பின் இவர் இரண்டாவதாக அர்னவை திருமணம் செய்து கொண்டார்.மேலும், திருமணம் ஆகி கொஞ்ச நாட்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார்.மேலும், காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் திவ்யா புகார் கொடுத்து இருந்தார். இது குறித்து அர்னவ் விளக்கமளித்து இருந்தார்.

அதுமட்டும் இல்லாமல் அவர் திவ்யா மீது குற்றச்சாட்டு வைத்து இருந்தார். இப்படி இருவருமே மாற்றி மாற்றி பேட்டி கொடுத்திருந்தார்கள். இதை தொடர்ந்து திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அர்னவ் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து போலீஸ் அர்னவை கைது செய்தனர். பின் அர்னவ் ஜாமினில் வெளியில் வந்தார். வெளியில் வந்த பின்னரும் கர்ப்பமாக இருந்த திவ்யாவை அர்னவ் கண்டுகொள்ளவே இல்லை.

-விளம்பரம்-

மேலும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் சேர்ந்து சமீபத்தில் திவ்யாவிற்கு வளைகாப்பை நடத்தி இருந்தனர். கடந்த மாதம் பேட்டி ஒன்றில் பேசிய திவ்யா ”இன்னும் பத்து பதினைந்து நாட்களில் குழந்தை பிறந்து விடும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனாலும், இன்று கூட ஓய்வெடுக்காமல் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அதனால் இது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும். அவனை நல்ல மனிதனாக வளர்ப்பேன்.

பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்றெல்லாம் அவனுக்கு கற்றுக் கொடுப்பேன் என்று கண்ணீர் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தள்ளது. தனது மகளின் கையை பிடித்தவாரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் திவ்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த குழந்தையோட பாவம் உன்ன சும்மா விடாது அர்னவ் என்றும் கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement