நடிகர் விமலின் மனைவி அக்ஷயா சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது விமல் மீது ஸ்டாலினிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 2021கான சட்ட மன்ற தேர்தல் வருகிற ஏப்ரில் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வருகிற 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில் பல்வேறு சக்திகளிடம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது விருப்பமானவை நடித்து வரும் நிலையில் நடிகர் விமலின் மனைவியும் தேர்தலில் போட்டியிட விருப்பமனுவை அளித்துள்ளார். தமிழில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த விமல் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வந்தார்.
தமிழில் இவர் நடித்த களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. கடந்த சில ஆண்டுக்கு முன்னர் கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். அதேபோல கொரோனா காலத்தில் கொடைக்கானலில் உள்ள வனப்பகுதியில் அனுமதியில்லாமல் விமல் மற்றும் சூரி ஏரியில் மீன் பிடித்ததாக கூறி புகார் எழுந்தது.
இதையும் பாருங்க : இதனால் தான் இரண்டு வாரமாக குக்கு வித் கோமாளிக்கு வரல – பவித்ரா வெளியிட்ட விளக்கம்.
இதையடுத்து சூரிய மற்றும் விமல் ஆகிய இருவருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் கூட விதிக்கப்பட்டு இருந்தது. இப்படி விமலுக்கு சமீப காலமாக போறாத காலமாக இருக்க நடிகர் விமலின் மனைவி அக்ஷயாவும் வருகிற சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விருப்ப மனுவை அளித்துள்ளனர். அக்ஷயாவுக்கு திமுக சார்பில் சீட் தரப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இப்படி ஒரு நிலையில் நடிகர் விமல் மீது, பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விமல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் தொண்டர் ஒருவர் புகார் அளித்துள்ளார். நடிகர் விமல் பண மோசடி செய்துள்ளதாக தஞ்சை பட்டுக்கோட்டை திருநாவுக்கரசு என்பவர் ஸ்டாலினிடம் புகார் அளித்துள்ளார். எனவே, விமல் மனைவியின் விருப்ப மனுவை திமுக கட்சி ஏற்குமா என்ற சந்தேகம் ஏற்பட்ட்டுள்ளது.