திமுகவை சேர்ந்த இவர், எங்களின் 57 லட்சத்தை ஏமாற்றிவிட்டார் – ஸ்டாலினை டேக் செய்து பிரசாந்த் போட்ட பதிவு.

0
1194
stalin
- Advertisement -

ஒரு திரைப்படம் வெளியாகி ஒரு சில நாட்கள் கழித்து டிவி மற்றும் பத்திரிகையில் விமர்சனம் பார்த்து வந்த கலாச்சாரம் போய் தற்போது படம் வெளியான ஒரு சில மணி நேரத்தில் யூடுயூபில் விமர்சனத்தை போட பல யூடுயூப் சேனல்கள் இருக்கிறது. அப்படி தமிழ் படங்களை விமர்சனம் செய்யும் யூடுயூப் விமர்சகர்களின் மிகவும் முக்கியமானவர் பிரசாந்த். மற்ற விமர்சகர்களை விட இவரது விமர்சனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவிடுகிறது. இவரது பாண்டா பிரசாந்த் என்று மக்கள் மத்தியில் செல்லப்பெயரை வாங்கிய இவர் சினிமாவில் கூட தனது தடத்தை பதித்து விட்டார்.

-விளம்பரம்-

திரைப்பட விமர்சனங்கள் மட்டுமல்லாமல் இவர் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கும் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் திமுகவை சேர்ந்த நபர் ஒருவர் பணம் ஏமாற்றி விட்டதாக செய்துள்ள ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 10 வருடம் முன்பு ஒரு தி.மு.க பிரமுகரால் என் அப்பா ஏமாற்றப்பட்டார், அவரது நிலம் அபகரிக்கப் பட்டது.அதில் மனம் உடைந்தார்,அவர் தொழில் முடங்கியது.

- Advertisement -

5 வருடம் கோர்ட்டிற்கு நாயாய் அலைந்து தீர்ப்பு பெற்று இருக்கிறோம்,ஆனால் இன்னும் ஏமாற்றப்பட்ட பணமோ இடமோ வந்த பாடில்லை.இதை அரசியலுக்காக எழுத வில்லை. 10 வருடமாக இழந்த பணத்திற்கு வட்டி கட்டி நானும் அப்பாவும் ஓய்ந்து விட்டோம். வீட்டில் நிம்மதி போய் பல வருடங்கள் ஆகி விட்டது இதனால் !! ஆற்றாமையால் எழுதுகிறேன்.எப்போது அறிவாலயம் அழைத்தாலும் , அங்கே சென்று வழக்கு விவரங்களை அளிக்கத் தயார். ஏதாவது ஒரு வகையில் தீர்வு கிடைத்தால் நிம்மதி அடையும் எங்கள் குடும்பம்.

எங்கள் நிலத்தை ஏமாற்றிய தி.மு.க பிரமுகர் பெயர் மனோகரன் . திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் எங்களை போல் 30க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி உள்ளார். 10ற்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மேல், சட்ட ஓட்டைகள் மூலமாக இன்னும் அவர் சிறைக்கு வெளியே என்று பதிவிட்டுள்ள பிரசாந்த், பணத்தை ஏமாற்றிய அந்த திமுக பிரமுகரின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அதில், இவர்தான் எங்களை ஏமாற்றிய தி.மு.க பிரமுகர் மனோகரன். திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் இவர் உங்கள் நிலத்தை வாங்குகிறேன் என்று வந்தால் ஏமாந்து விடாதீர்கள். Cheque தந்து, நிலம் கிரயம் செய்த பின் அந்த cheque bounce ஆனது. நாங்கள் ஏமாந்த தொகை – 57 லட்சம் ரூபாய் பிரசாந்த்தின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன் ஒருவர், இவ்ளோ நாள் வாய் மூடி இருந்ததன் காரணம் என்ன ??? என்று கேட்டதற்கு, வழக்கு நிலுவையில் இருந்தது. தீர்ப்பு எங்களுக்கு சாதகமாய் சில மாதங்களுக்கு முன் வந்தது. தீர்ப்பு இல்லாமல் பேசுவது சரியாக படவில்லை. தீர்ப்பு வந்த உடனே சில தி.மு.க காரர்களிடம் உதவி கேட்டேன். எதுவும் நடக்க வில்லை.

தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தி மு கவை சேர்ந்தவர் மீது பிரசாந்த் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement