-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

இரண்டு ஆண்டுக்கு முன்னரே நரிக்குறவருக்காக சண்டை’ஜெய் பீம்’ சம்பவத்தை அப்போதே செய்துள்ள திமுக Mla – தற்போது வைரலாகும் வீடியோ.

0
1146
trb-raja

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. பழங்குடியினர் மக்களின் வாழ்க்கையையும், அவர்கள் அனுபவித்த கஷ்டங்கள் குறித்த உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டது ஜெய் பீம் படம். தற்போது சோசியல் மீடியாவில் இந்த படம் குறித்து பாராட்டு மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாபல்லபுரம் அடுத்து இருக்கக்கூடிய பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் நரிக்குறவர்கள் என்கிற இருளர். இந்தப் பகுதியில் 80 குடும்பங்கள் வசித்து வருகிறது. மேலும், சில மாதங்களுக்கு முன்னர் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த அஸ்வினி என்ற பெண் கோயிலில் அன்னதானம் சாப்பிட சென்றிருந்தபோது அங்கு உள்ளவர்கள் அஸ்வினியை திட்டி, அவமரியாதை செய்து வெளியே துரத்தி உள்ளார்கள்.

-விளம்பரம்-
TRB Rajaa - தமிழிடம் ஆசி பெற்றேன் #Thalaivar #Kalaignar... | Facebook

இதுகுறித்து அஸ்வினி ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், நாங்களும் மனிதர்கள் தான். எங்களுக்கும் மரியாதை இருக்கிறது. அன்னதானம் தானே செய்கிறீர்கள். ஒன்னும் உங்கள் வீட்டு விழாவில் அல்லது உங்கள் வீட்டுக்குள்ளே வந்து நான் சாப்பிடவில்லை என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இப்படி இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியா முழுவதும் வைரலானது. இது குறித்து பல தரப்பினரும் தங்களுடைய ஆதரவை அஸ்வினிக்கு தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் அஸ்வினியின் வீட்டிற்கு சென்று எந்த கோயிலில் அவருக்கு அவமானம் நடந்ததோ அதே கோயிலில் அவருடன் உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கிறார். இதற்கு பிறகு முதலமைச்சர் அவர்களும் அஸ்வினியின் வீட்டிற்கே சென்றுள்ளார்.

பின் அவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு வீடு, மின்சாரம் போன்ற வசதிகளை செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஒருவருக்கு ஏற்பட்ட அவமானம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இதேபோல் திமுக எதிர்க்கட்சியில் இருக்கும் போது நரிக்குறவர் ஒருவருக்கு வங்கியில் கடன் வாங்க சென்று இருக்கிறார். ஆனால், வங்கியின் அதிகாரி அந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த நபரை அவமரியாதையாக நடத்தி, ஆபாசமாக பேசி வங்கியில் இருந்து துரத்தி இருக்கிறார். இதை அறிந்த அந்த பகுதி திமுகவை சேர்ந்த எம்எல்ஏவாக இருந்த டிஆர்பி ராஜா வங்கிக்கு சென்று உள்ளார்.

-விளம்பரம்-

பின் அந்த வங்கியின் மேலாளர் எதிராக சேரை போட்டு அந்த நரிக்குறவரை உட்கார வைத்து உள்ளார். பின் உங்கள் வேலை மக்களுக்கு கடன் கொடுப்பது தானே, பின் ஏன் இவர்களை இப்படி நடத்துகிறீர்கள்? நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்கள், மக்களுக்காக தானே வேலை செய்கிறீர்கள். இவர்களை எல்லாம் பார்த்தால் மனிதர்களாக தெரியவில்லையா? என்று கோபமாக பேசி அந்த நபருக்கு கடன் வாங்கி தந்து இருக்கிறார். இப்படி இவர் 2019 ஆம் ஆண்டு பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் டிஆர்பி ராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியது, இது உண்மை தான்.

-விளம்பரம்-

அவர்களிடம் ஆபாசமாக பேசுவதைக் கேட்டு தான் நானும் வங்கி மேலாளரிடம் கோபமாக பேசி விட்டேன். இந்த நாட்டில் எல்லோரும் சமம்தான். அவர்களுக்கான அங்கீகாரம் கூடிய விரைவில் கிடைக்கும். அவர்களுடைய எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நரிக்குறவர்கள், இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, நலவாரிய அட்டை உள்ளிட்டவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news