‘பட்டாசு வெடிக்காதீங்க’ – பத்ம பிரியா வெளியிட்ட வீடியோ. கடந்த ஆண்டு தீபாவளியன்று அவர் போட்ட பதிவை பாருங்க.

0
396
padma
- Advertisement -

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்காமல் பசுமை தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று பத்ம பிரியா வெளியிட்ட வீடியோவை கடந்த ஆண்டு அவர் போட்ட தீபாவளி பண்டிகை பதிவடன் ஒப்பிட்டு பலரும் கேலி செய்து வருகின்றனர். யூட்யூப் பிரபலமாக இருந்தவர் பத்ம பிரியா. இவர் , 2019-ம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து வீடியோ ஒன்றை அவரது யூட்யூப் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ யாரும் எதிர்பாராத வகையில் யூட்யூப்பில் ட்ரெண்டானது. லட்சக்கணக்கானோர் அந்த வீடியோ பார்த்து பகிர்ந்தனர்.

-விளம்பரம்-

அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் அளவுக்கு பரவியது. அந்த வீடியோவால் இவருக்கு பா ஜ கட்சியினர் சிலரால் கொலை மிரட்டல் வர அந்த வீடியோவை நீக்கினார். இந்த வீடியோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த இவருக்கு கமலின் மக்கள் நீதி மய்யத்தில் சேர்ந்து அரசியல் வாதியாகவும் மாறினார். கமல் கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே இவருக்கு நிர்வாக பொறுப்பும் வழங்கப்பட்டது.

- Advertisement -

மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட்டார். ஆனால், இவர் போட்டியிட்ட தொகுதியில் இவர் தோல்வியடைந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இப்படி ஒரு நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன்,கட்சியில் இருந்து விலகியதையடுத்து இவரும் கட்சியில் இருந்து வெளியேறினார்.

மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் சேர்ந்தார் பத்மபிரியா. இதனால் இவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பத்மப்ரியா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், நாம் பசுமை தீபாவளிதான் கொண்டாட வேண்டும். சில நொடிகள் தோன்றி மறையும் ஒளி மற்றும் ஒலிக்காக நாம் நம்முடைய எதிர்காலத்தை தான் செலவழிக்கிறோம். 10 லிருந்து 15 சதவீதம் பேருக்கு இதனால் ஆஸ்துமா நுரையீரல் நோய்கள் போன்ற பல நோய்கள் வருகிறது.

-விளம்பரம்-

இப்படி செய்வதன் மூலம் நாம் மட்டும் பாதிக்கப்படுகிறோம். இல்லை, கதிர் வீச்சால் பாதிக்கப்படும் பறவைகளை விட தீபாவளி பண்டிகையால் பாதிக்கப்படும் பறவைகள் தான் அதிகம் இருக்கிறது. வெடிவைத்து யானை கொன்றால் வருந்தும் நாம் ஏன் ரோட்டில் இருக்கும் நாய்களும் மாடுகளும் அடிபட்டு இறப்பது பற்றி ஏன் வருத்தப்படமாற்றோம். நீங்கள் பசுமை தீபாவளி கொண்டாட விரும்பினால் வீட்டில் மரக்கன்றை நடுங்கள் என்று கூறி இருந்தார்.

பத்ம பிரியாவின் இந்த வீடியோவை பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று சிவகாசி பட்டாசுகளை வாங்குங்கள் என்று பத்ம பிரியா விளம்பரம் செய்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார். இதனை தற்போது குறிப்பிட்டு ட்விட்டர் வாசிகள் பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Advertisement