வருசத்துக்கு ரெண்டு பண்ணுங்க ! சிம்புவுக்கு தனுஷ் கொடுத்த அட்வைஸ் ?

0
1018

விழாவில் தனுஷ் பேசுகையில், “தான் இசையமைத்த பாடல்களைக் கேட்கச்சொல்லி சிம்பு எனக்கு அனுப்பியிருந்தார். இந்த விழாவுக்கு சிம்பு அழைப்பு விடுத்ததாலேயே நான் வந்தேன்.
நான் அவரை என் விழாவுக்கு அழைத்தால் அவரும் நிச்சயம் வருவார். அவரும் நானும் நல்ல நட்புடன் உள்ளோம். மற்றவர்கள் கூறுவதுபோல் எனக்கும் அவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களுக்கு நடுவில் இருப்பவர்களுக்குத்தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என நினைக்கிறேன்.

என் ரசிகர்கள் சிம்பு படத்தைப் பார்க்க வேண்டும். சிம்பு ரசிகர்கள் என் படத்தை பார்க்கவேண்டும். எல்லா ரசிகர்களும் எல்லாருடைய படத்தையும் பார்க்க வேண்டும். அப்போதுதான் தேய்ந்து கொண்டிருக்கும் சினிமாத்துறை புத்துணர்ச்சி பெறும்” என்றார். அப்போது சிம்பு ரசிகர்கள் தொடர்ந்து கைதட்டியபடி ஆர்ப்பரித்தனர்.

- Advertisement -

அப்போது தனுஷ், ‘‘அப்படித்தான் இருக்கவேண்டும். இன்றைக்கு இந்தச் சத்தம் சிம்புவுக்குக் கேட்கவேண்டும். உங்களுடன் இருக்கும் ரசிகர்களுக்காகவாவது ஆண்டுக்கு இரண்டு திரைப்படங்களாவது நடிக்க வேண்டும். அது உங்கள் கடமை. உங்கள் ரசிகர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Advertisement