இதில் இப்போது நாம் பார்க்கப்போவது ரஜினி--கமல் பற்றி தான். ரஜினி "என்வழி தனி வழி" என்பதற்கேற்ப ஆன்மீகம்,கடவுள் பக்தி என்று தனியான ஒரு பாதையில் பயணிப்பவர்.
கமலோ "கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகவாதி மற்றும் மதங்களையும் சாதிகளையும் ஒழித்திட வேண்டுமென்று" குரல் கொடுப்பவர்.
இருவரும் நேரெதிர் திசைகளில் பயணித்தாலும் அவர்களை இவ்வளவு காலமும் இணைத்தது சினிமாவே.
இதையும் படிங்க: தம்பி விஜய் நல்ல படங்களில் நடிக்கவேண்டும் – கமல் அறிவுரை !
இந்நிலையில் தற்போது தமிழக அரசியல் களத்தில் இறங்க இருவருமே முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். இருவரும் எப்போது வேண்டுமானாலும் அரசியல்கட்சி தொடங்கும் நிலையில் தான் தற்போது உள்ளனர்.இந்நிலையில், ரஜினியுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவது அருவருப்பாக இருப்பதாக கமல் ஆவேசப்பட்டுள்ளார்.
மேலும் கூறும்போது நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். ரஜினி ஒரு பாதையில் செல்பவர், நான் வேறு பாதையில் செல்பவன். என்னையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவது அருவருக்கத்தக்கது. நான் அரசியல் களம் இறங்கப் போகிறேன் என்று அவரிடம் தெரிவித்து விட்டேன். என்னுடைய கட்சியில் இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் திறமையானவர்களுக்கும் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும்.
நான் ஆரம்பிக்கும் கட்சிக்கு ஆம் ஆத்மி கட்சி போல் மக்களிடமிருந்து நிதி திரட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ரஜினியுடன் அரசியலில் இணைவீர்களா என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக இணைவேன் என்று பதிலளித்துள்ளார்




