பிக்பாஸ் டைட்டில் வின்னரான ஆரவ் தனக்கு கிடைத்த பணத்தை என்ன செய்யபோகின்றார் என்று தற்போது தெரிவித்துள்ளார்.
விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்-1 கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் முதல் சீசனின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார்.
பிக்பாஸ் ரசிகர்கள் பெரும்பாலும் சினேகன் மற்றும் கணேஷ் வெங்கட்ராமனே வெற்றிபெறுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ஆரவ் வெற்றிபெற்றது அவர்களுக்கு சற்று அதிர்ச்சியை தந்திருக்கும் எனலாம்.ஆனாலும் ஆரவ்விற்கும் பிக்பாஸில் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை மறுக்கமுடியாது.
இந்நிலையில் பிக்பாஸ் வெற்றியின் மூலம் தனக்கு கிடைத்த ஐம்பது இலட்ச ரூபாயை தன்னுடைய மேல் படிப்பிற்காகவும் விவசாயத்திற்காகவும் பயன்படுத்தப்போவதாக தற்போது அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எனக்கு அந்தப் பேர் வரக் காரணமே ஆரவ்தான் – ‘பிக் பாஸ்’ காஜல்
ஒரே ஒரு நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் ஆரவ். BiggBoss நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ரூ. 50 லட்சம் தொகையையும் பெற்றிருக்கிறார்.