அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சாரதி ஒரு படித்து முடித்த பட்டதாரி ஆவார். பட்டப்படிப்பு முடிந்தவுடன் ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதன் பின்னர் யதேச்சையாக சன் டிவியில் ஒரு ஆடிசனில் கலந்துகொண்டு செலக்ட் ஆனார்.
அதன் பின்னர் வந்ததது தான் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய பிரபலம் ஆனார் விஜய் சாரதி. விஜய், அஜித், ரஜினி, கமல் என பலரையும் பேட்டி கண்டுள்ளார் விஜய் சாரதி.
நிகழ்ச்சி பெரிதாக வளர்ந்து இவரது திறமையை கண்ட சன் டிவி நிர்வாகம் இவரை சேனல் ஹெட்'ஆக நியமித்தது. தற்போது சன் டிவியில் நிர்வாக வேலைகள் அதிகமாக இருப்பதால் நீங்கள் கேட்ட பாடல் போன்ற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத நிலையில் உள்ளார் விஜய் சாரதி. கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்தார்.




