பிரபல காமெடி நடிகர் மயில்சாமி திடீர் மரணம் அடைந்திருக்கும் சம்பவம் திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெறும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவராத்திரி பூஜை நடைபெற்றது. இதில் ட்ரம்ஸ் சிவமணி பங்கேற்று இசை கச்சேரி செய்து இருந்தார். இதில் மயிலசாமியும் கலந்துகொண்டு இருந்துள்ளார். விடிய விடிய சிவராத்திரி பூஜையில் இருந்துவிட்டு பின்னர் வீட்டிற்கு சென்று இருக்கிறார். சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவருக்கு திடீர் மரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியிலேயே காலமாகி இருக்கிறது.
இவரில் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் மயில்சாமியின் இறப்பு குறித்து இதயநோய் மருத்துவர் கூறுகையில் “மாரடைப்பு ஏற்பட்டு ஸ்டெண்ட் செய்திருந்தால் மாத்திரைகளை விடாமல் சாப்பிட வேண்டும். அப்படி அதிகபட்சம் 3 நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் அடைத்துக்கொள்ளும். அதே போல பைபாஸ் செய்து பம்பிங்க் குறைவாக இருக்கும் போது அதிக உற்சாகமாக இருந்தால் இதயத்தில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதே போல சர்ஜரி செய்யும் பட்ச்சத்தில் நம்முடைய வழக்கமான உணர்வில் இருந்து சிறிது மாறினாலும் கூட மீண்டும் மாரடைப்பு வரலாம்.
மயில்சாமி மறைவுக்கு காரணம் :
இப்படிப்பட்ட நிலையில் மயில்சாமி விஷியத்தில் அவரது நிலைமை என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு சக்கரை நோய் இருந்திருந்தால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இருகிறது. வழக்கமாக 10.30 மணிக்கு தூங்கும் ஒருவர் மாறாக அதிகாலை வரையில் தூங்காமல் இருந்தால் அவருக்கு ஸ்ட்டர்ஸ் உண்டாகும். இதை வழக்கமில்லாத உடல்சோர்வு என்பார்கள். நடிகர் மயில்சாமி கோவிலில் விழித்திருந்தாலும் அவருக்கு அந்த தூக்கமின்மை வழக்கத்திற்கு மாறானது.
இதயக்கோளாறு வரக்காரணம் :
ஒரு குடும்பத்தில் அம்மாவிற்கோ அல்லது அப்பாவிற்கோ மாரடைப்பு 40 களில் இருந்தால் அது அவர்களின் பிள்ளைகளுக்கும் வரலாம். எனவே புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் உபயோகிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தற்போது உள்ள இளைஞர்கள் அதிகம் போதை பொருள் உபயோகப்படுத்துகின்றனர். அது பின்னாளில் வினையாக கூடும்.
இன்றய டிஜிட்டல் உலகத்தில் சிலர் வழக்கத்திற்கு மாறாக அதிக உடற்பயிர்ச்சி செய்வார்கள். சிலர் எந்த வேலையும் செய்யாமல் கேம் விளையாடுவார்கள், சிலருக்கு இயற்கையாகவே தசை பொரிதாக இருக்கும், சிலருக்கு அதிக கொலஸ்ட்ரால் இருக்கும், சிலர்க்கு மரபிலேயே இந்த பிரச்னை இருக்கும். இப்படி இருக்கும் நபர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மார்படைப்பு வரலாம். எனவே அடிக்கடி உற்சாகமடைபவர்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இளம் வயதில் இதயக்கோளாறு :
பதற்போது நாங்கள் 22 வயதில் இருந்து 30 வயதுகளில் உள்ள இதய நோயாளிகளை பார்க்கிறோம். அவர்களிடம் நாங்கள் கேட்கும் முதல் கேள்வியே மது அருந்துகிறீர்களா, புகைப்பிடிக்கிறீர்களா என்று தான். இந்த பிரச்னை இருந்தால் இதனுடன் வழக்கை முறையும் சேர்ந்து கொள்கிறது. ஏனென்றால் பலர் வீட்டில் பைக்கை ஸ்டார் செய்தால் அலுவலகத்திற்கு சென்று தான் நிறுத்தவோம். அதோடு அங்கு அமர்ந்துதான் வேலை. எனவே இப்படி உடல் உழைப்பே இல்லாமல் இருக்கும் போது மாரடைப்பு இளம் வயதிலேயே வர வாய்ப்பிருக்கிறது.
40 வயதுக்கும் மேல் இருப்பவர்கள் :
40 வயத்திற்கு மேல் உள்ளவர்கள் குறிப்பாக சக்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். முன்னரெல்லாம் பெண்களுக்கு இதய கோளாறு வராமல் இருந்தது. ஆனால் தற்போது பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. அதற்கு காரணம் சக்கரை நோய் தான். எனவே அனைவரும் சத்தான உணவு சாப்பிட்டு போதிய உடற்பயிர்ச்சி மேற்கொள்ள வேண்டும். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் செய்யும் தியானம், யோக போன்ற சிறிய விஷியங்கள் கூட உங்களை மாரடைப்பு ஆபத்திலிருந்து இருந்து காப்பாற்றக்கூடும்.