‘நான் பொதுவாகத் தான் பேசினேன்’ – நெப்போலியன் மகன் விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த மருத்துவர் காந்தராஜ்

0
230
- Advertisement -

பிரபல மருத்துவர் காந்தராஜ், நெப்போலியனிடம் மன்னிப்பு கேட்டிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே நெப்போலியன் மகனின் திருமணம் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் தான் நெப்போலியன், தனது மூத்த மகன் தனுஷிற்கு ஜப்பானில் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி வைத்தார். தனுஷ், மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி என்ற தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பல பிரபலங்கள் கலந்து கொண்டு விமர்சையாக நடந்த நெப்போலியன் மகனின் திருமணத்தை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில், நெப்போலியன் மகனின் நிச்சயதார்த்தம் முடிந்த போது, டாக்டர் காந்தா ராஜ் என்பவர், நெப்போலியன் மகனுக்கு இருப்பது ஒரு அரிய வகை நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 12 அல்லது 18 வயதிலேயே இறந்து விடுவார்கள். நெப்போலியன் மகன் 25 வயது வரை இருப்பதே பெரிய சாதனை தான். அதுபோல அவரால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது.

- Advertisement -

டாக்டர் காந்தராஜ் சொன்னது:

சில பெண்கள் விளம்பரத்திற்காக கூட இப்படி இருப்பவர்களை திருமணம் செய்து கொள்வார்கள் என்று டாக்டர் காந்தராஜ் கூறியிருந்தார். இதையடுத்து, சமீபத்தில் தனது மகனின் திருமணம் முடிந்த நிலையில் நெப்போலியன் பல பேட்டிகளில் பேசி வருகிறார். அந்த வகையில் தன் மகனின் திருமணம் குறித்து வரும் பேட் கமெண்ட்ஸ் பற்றி ஒரு பேட்டியில் பேசும்போது, டாக்டர் ஒருத்தர் ரொம்ப தப்பாக பேசியிருந்தார். அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் சொல்லிக் கொள்கிறேன். நான் நிறைய நல்ல காரியங்கள் பண்ணுவேன், அதை வெளியே சொல்ல மாட்டேன், இப்போ சொல்கிறேன்.

நெப்போலியன் பதிலடி:

‘என் உயிர்த் தோழன் பாபு’ என்று ஒருத்தர் இருந்தார். அவர் சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து ஏற்பட்டு 30 வருடங்களாக படுத்த படுக்கையில் இருந்தார். அவருக்கும் எனக்கும் நேரடியாக எந்த பழக்கமும் கிடையாது. இருந்தாலும் பொன்வண்ணன் எனக்கு ஃபோன் செய்து விஷத்தை சொல்லி உதவி செய்ய சொன்னார். பாபு என்பவர் எனது குருநாதர் பாரதிராஜாவின் மாணவர். அந்த ஒரு எண்ணத்திலேயே மாதம் மாதம் அவருக்கு பணம் அனுப்பினேன். என் மகன் குறித்து ஒரு மருத்துவர் பேசினாரே அவரின் நெருங்கிய உறவினர் தான் பாபு.

-விளம்பரம்-

மருத்துவர் காந்தராஜ் பேட்டி:

ஆனால், அவரை அந்த டாக்டர் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் எனது மகனைப் பற்றி பேசினார். அது தான் எனக்கு வருத்தமாக இருந்தது என்று கூறியிருந்தார். மேலும், நெப்போலியன் குறிப்பிட்ட மருத்துவர் காந்தராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அவர் சினிமா பிரபலங்களை பற்றி கூட சில பேட்டிகளில் பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில், ஒரு பேட்டில் இது குறித்து பேசிய காந்தராஜ், நெப்போலியன் மகன் பற்றி எந்த இடத்திலும் நான் பேசவே இல்லை. அவர் என்று குறிப்பிடாமலேயே தான் என்னிடம் தசை சிதைவு நோய் குறித்து கேட்டார்கள்.

மன்னிப்பு கேட்ட காந்தராஜ்:

மேலும், நான் அந்த நோய் பற்றி தான் பேசினேன். ஒரு கட்டத்தில் நெப்போலியன் மகனுக்கு அந்த நோய் என்றதும் நான் அதைப் பற்றி பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். ஒரு மருத்துவராக நோயாளியை பற்றி பேசக்கூடாது. அதே சமயம் அக்ஷயா தனது வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறார் என்று கூறியிருந்தேன்‌. நான் பொதுவாக பேசியது கஷ்டத்தை கொடுத்திருந்தால் நான் நெப்போலியனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், எனது அக்கா மகன் பாபுவுக்கு நெப்போலியன் பண உதவி செய்தது எனக்கு தெரியாது. ஆனால், முதல் ஆளாக விஜய் தான் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார். அதற்குப் பிறகு பொன்வண்ணன், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோரும் உதவி இருந்தார்கள் என்று டாக்டர் கூறியுள்ளார்.

Advertisement