நான் நார்த் இந்தியன் எல்லாம் கிடையாது – டாகடர் பட நடிகர் கராத்தே கார்த்தி பேட்டி.

0
2503
suresh
- Advertisement -

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு இந்த படம் வசூலில் கோடிகளை குவித்தது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் வட இந்தியர் கதாபாத்திரத்தில் கராத்தே கார்த்தி நடித்து இருப்பார். இவர் சினிமா உலகில் நுழைந்து 14 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், டாக்டர் படத்தின் மூலம் தான் இவருக்கு பேரும் புகழும் கிடைத்து இருப்பதாக கூறியுள்ளார். இவரைப் பற்றிய தகவலை தான் இங்கு பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-
karate-karthik-interview-about-doctor-success

இவர் மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றி இருந்தார். அப்போது இவர் அகில இந்திய காவல்துறை பாக்ஸிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். அகில இந்திய கராத்தே போட்டிகளில் 13 முறை சாம்பியன் ஆகவும் இவர் தேர்வாகியுள்ளார். இது மட்டுமில்லாமல் இவர் ஜிம்னாஸ்டிக், சிலம்பம், ஜூடோ, கிக்பாக்ஸிங் போன்ற பல கலைகளையும் கற்று சிறந்து உள்ளார். இருந்தும் கராத்தே கார்த்திக்கு சினிமா மீது அதிக ஆர்வம் இருந்ததால் தன்னுடைய காவல்துறை பணியை விட்டு நடிக்க தொடங்கினார்.

- Advertisement -

கமலஹாசனின் தசாவதாரம் படத்தின் மூலம் தான் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் அதிக பாராட்டு கிடைத்ததாக பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, நான் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என்ற படத்தில் நடித்தேன். இந்த தருணத்தில் அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்த படத்தில் நடித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். 14 வருட சினிமா முயற்சியில் என் திறமையை பார்த்து முதல் கால் என்று சொல்லலாம். இது என்னால் என்றும் மறக்க முடியாது.

டாக்டர் படத்தில் கோவாவில் வரும் காட்சிகளில் வட இந்தியர் போல் நடித்திருப்பேன். அதனால் என்னை நிறைய பேர் வட இந்தியர் என்று நினைத்து கொண்டார்கள். ஆனால், நான் உண்மையான தமிழன். எனது சொந்த ஊர் மதுரை. இந்த படத்தை தொடர்ந்து நிறைய அழைப்பும், பாராட்டும் வந்து கொண்டு இருக்கிறது. இதுவரை நான் பட்ட கஷ்டங்கள் அனைத்துமே டாக்டர் படத்தின் மூலம் தீர்ந்தது. இனிமேல் என்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-
Advertisement