இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் படம் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு இந்த படம் வசூலில் கோடிகளை குவித்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். படத்தில் இவருடைய நடிப்பும் அழகும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தது. மேலும், இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றது.
இந்த படத்தில் யோகி பாபு, குக் வித் கோமாளி தீபா என பல பிரபலங்கள் நடித்து இருந்தாலும் படம் முழுக்க ரசிகர்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த நபர் என்றால் ரெடின் கிங்ஸ்லி தான். படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. தற்போது யோகி பாபு தான் காமெடி கிங் என்று கொண்டிருந்த நிலையில் இப்படத்தின் மூலம் யோகிபாபுவை ரெடின் கிங்ஸ்லி ஓவர் டேக் செய்துள்ளார் என்று சொல்லலாம்.
இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் அடுத்தடுத்து நான்கு படங்கள் தொடர்ந்து வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் இரண்டு படங்கள் தமிழ் சினிமாவில் பிரமாண்ட ஹீரோக்களின் படங்கள். டாக்டர் படத்தை தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி அவர்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து உள்ள அண்ணாத்தா படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். இந்த படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து நெல்சன் –விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள பீஸ்ட், மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள இடியட், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் பத்து தலை ஆகிய படங்களில்
ரெடின் கிங்ஸ்லி காமெடி நடிகனாக நடித்துள்ளார். இந்தப் படங்கள் அனைத்தும் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வெளியாக உள்ளன. இனி கோலிவுட் வட்டாரத்தில் ரெடின் கிங்ஸ்லி தான் டாப் காமெடி கிங்காக இருப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.