குலாப் ஜாமுன், நுங்கு, மாட்டுக்கறி குறித்த பேச்சு – ஷர்மிகாவிற்கு சித்த மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ்.

0
493
Sharmika
- Advertisement -

சமீபத்தில் தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியில் மருத்தவ இணை இயக்குனர் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் மருத்தவ நெறிமுறைகளை மீறி டாக்டர் ஷர்மிகா யூடியூபிலும் இன்ஸ்டாகிராமில் விடீயோக்களை பதிவிட்டு வருவதினால் யாராவது ஒருவர் அவரின் மீது வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் அதற்கு முதன் முறையாக பதிலத்துள்ளார் டாக்டர் ஷர்மிகா.

-விளம்பரம்-

சமீபத்தில் அவர் பிரபல ஊடகத்திற்கு கொடுத்திருந்த பேட்டியில் அவர் கூறியதாவது `நான் எல்லோருக்கும் சித்த மருத்துவம் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்படி செய்து வருகிறேன். நான் சென்னையில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லுரியில் பி.எஸ்.எம்.எஸ் என்ற மருத்துவ படிப்பை படித்து சென்னை அருகம்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமணையில் சித்தமருத்துவ கவுன்சிலில் பதிவும் செய்துள்ளேன். நான் என்ன படித்தேனோ அதை தான் நான் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறேன் என்று கூறினார்.

- Advertisement -

அதே போல மாட்டு இறைச்சியால் பல விதமான நோய்கள் வரும் என்று தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள “நோயில்லா நெறி” புத்தகத்தில் இருந்தது. அதை வைத்துதான் உடல் உழைப்பு உள்ளவர்கள் ஆடு, மாடு போன்றவற்றை சாப்பிடலாம் ஆனால் பலர் அமர்ந்து வேலை பார்த்து வருகின்றனர். அதனால் தான் நான் மாட்டுக்கறி சாப்பிட கூடாது என்று கூறினேன். ஆனால் அதற்கு என்னை பாஜகவுடன் தொடர்பு படுத்தி ஏன் பேசவேண்டும்? என்று கூறினார்.

நான் குலாப் ஜாமுன் பற்றி சொன்னது மனிதனின் இயல்பு தான். அதற்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறன். அதே போல நெய் யை உருக்கி சாப்பிட்டு விட்டு சூடு தண்ணீர் குடித்து நடை பயிற்சி செய்தால் முகம் பொலிவு பெரும் என்பது என்னுடைய அறிவுரை. இதை பலரும் செய்து புகைப்படங்களை எனக்கு அனுப்பினார்கள். நான் பி.எஸ்.எம்.எஸ் படித்திருக்கிறேன் எனக்கும் எல்லா நோய்களுக்குமான அறிவும் இருக்கிறது. இப்போதெல்லாம் புதிய புதிய நோய் வருவதினால் புத்தகத்தில் இருப்பதை மட்டும் சொல்ல வேண்டும் என்றால் மருத்துவராக இருக்க முடியாது.

-விளம்பரம்-

தொடர்ந்து பேசிய ஷர்மிகா மார்பக புற்று நோய் குறித்தும், மார்பகம் பேர்த்துவது குறித்தும் தனக்கு தெரிந்ததை சொன்னதாக கூறினார். மேலும் இவரை வைத்து சொல்லப்படும் ட்ரோல்களுக்கு தன்னுடைய அம்மா பாஜகவில் இருப்பதினால் விமர்சனம் வருவதாகவும் இனிமேல் நான் வெள்ளந்தியாக பேசாமல் தெளிவுடன் பேசப்போகிறேன் என்றும் கூறியிருந்தார். மேலும் இப்படி விமர்சனம் வருவதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று தன்னுடைய அம்மா சொல்லிக்கொடுத்ததாகவும் கூறியிருந்தார் ஷர்மிகா சரண்.

இந்நிலையில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வந்த சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் புகாரின் அடிப்படையில் 15 நாட்களுக்குக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement