தன்ஷிகா – டி.ராஜேந்தர் விவகாரம்.. ஓவியா சொல்வது என்ன ?

0
3956

சென்றவாரம் விழித்திரு படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய தன்ஷிகா மேடையில் டி.ஆர். பேரை சொல்ல மறந்துவிட்டார்.

Image result for TR dhanshika

அடுத்ததாக பேசத்தொடங்கிய டி.ராஜேந்தர் தன்பேரை குறிப்பிடாமல் தன்னை அவமதித்து விட்டதாக கூறி தன்ஷிகாவை வைத்து செய்ய தொடங்கினார். மேடையில் அடுக்குமொழி பேசிக்கொண்டே தன்பெயரை மறந்த தன்ஷிகாவை கடுமையாக திட்டத்தொடங்கினார்.

தன்ஷிகா அதெல்லாம் இல்லை சார் எனக்கு உங்கள் மேல் மிகுந்த மரியாதை உள்ளது என்று சொல்லியும் கேட்காத டி.ராஜேந்தர் தன்ஷிகாவை மேடையிலேயே அழவைத்துவிட்டார்.

Image result for oviya

இந்நிலையில் இது தொடர்பாக தன்ஷிகாவுக்கு பிக்பாஸ் புகழ் ஓவியா அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக ஓவியா தன் ட்விட்டர் பக்கத்தில், ”அன்பு தன்ஷிகா எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவத்துக்கு, உங்கள் மீதான மிக முரட்டுத்தனமான எதிர்வினை அது.

இனியும் கண்ணீர் விடவேண்டாம் தன்ஷிகா. வெற்றிப்புன்னகை உங்களிடம் இருக்கிறது

சிரித்தபடி இருங்கள் என்று தன்ஷிகாவுக்கு ஓவியா அறிவுரை வழங்கியுள்ளார்.