மீண்டும் ஒரு அபிராமி.! தண்ணீர் தொட்டியில் போட்டு குழந்தையை கொன்ற தாய்.! நாடகமாடியது அம்பலம்.!

0
869
- Advertisement -

சமீபத்தில் கள்ள காதலனுடன் வாழ்வதற்காக அபிராமி என்ற பெண் ,பெற்ற குழந்தைகளையே விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் தமிழகத்தையே திடுக்கிட வைத்தது. தற்போது கணவர் மீதான சந்தேக புத்தியால் இரண்டரை வயது குழந்தையை பெற்ற தாயே கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

murder

- Advertisement -

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், விசைத்தறி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தமிழ் இசக்கி என்ற மனைவியும் இருக்கிறார், அவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் தொழில் சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியரும் இரண்டரை வயதில் ஷிவன்யா ஸ்ரீ என்ற ஒரு பெண் குழந்தையும் இருந்துள்ளார்.

சந்தோசமாக வாழ்ந்து வந்த நாகராஜ் -தமிழ் இசக்கி தம்பதியரில் இசக்கிக்கு தனது கணவர் மீது அடிக்கடி சந்தேகம் வந்துள்ளது. இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டையும் வந்துள்ளது. மனைவியின் அதிகப்படியான சந்தோகத்தால் நிம்மதி இழந்துள்ள நாகராஜ் மனைவிடம் பேசாமல் இருந்துள்ளார். இப்படியே இவர்கள் சண்டை நீடித்துக்கொண்டே போக ஒரு கட்டத்தில் விபரீதமான முடிவை எடுத்துள்ளார் இசக்கி.

-விளம்பரம்-

thiru

கணவர் மனைவிக்கு இடையேயான சண்டை முற்றிப்போக தனது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார் இசக்கி . இதனால் கடந்த ஞாயிற்று கிழமை நாகராஜ் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து ,தனது இரண்டரை வயது குழந்தையை தண்ணீர் ட்ரம்மில் வைத்து அமுக்கி கொலை செய்துள்ளளார் இசக்கி. பின்னர் அவரது உடலை கட்டில் மேல் போட்டு விட்டு வீட்டில் இருந்த சீலிங் பேனில் தானும் தூக்கு போட்டுக்கொள்ள முறையற்சிசெய்துள்ளார் இசக்கி.

ஆனால், இசக்கி தூக்கு மாட்டுவதற்கு முன்னதாக வீட்டிற்கு வந்துள்ள நாகராஜ், மகள் பிணமாக கிடப்பதை பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனால், வீட்டிற்குள் வந்து யாரோ குழந்தையை கொலை செய்து விட்டார் என்று நாடகமாடியுள்ளார் இசக்கி. இதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கபட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்துள்ளனர்.

child

இந்த விசாரணையின் போது முதலில் நான் தான் கொலை செய்தேன் என்பதை மறைத்து வந்துள்ளார் இசக்கி. ஆனால், போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் இசக்கி. கணவர் மீதிருந்த சந்தேக புத்தியால் குழந்தையை கொன்ற இந்த சம்பவம் திருப்பூர் பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement