குடி போதையில் கார் விபத்து. இது தாண்டா போலீஸ் நடிகருக்கு ஏற்பட்ட நிலை.

0
4344
rajasekar
- Advertisement -

சினிமா துறையில் மிக பிரபலமான நடிகர் ராஜசேகரின் கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் காரில் இருந்து மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது குறித்து தீவிரமாக விசாரணையும் நடந்து வருகின்றது. தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ராஜசேகர். இவர் தெலுங்கு மொழி படம் மூலம் தான் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மாறுபட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். மேலும், இவர் தமிழில் ‘இதுதாண்டா போலீஸ்’ உட்பட சில படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகர் ராஜசேகர் தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார்.

Image result for actor rajasekar"

- Advertisement -

இவர் இப்போது ஒரு புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்க நடிகர் ராஜசேகர் தனது பென்ஸ் காரில் நேற்று அதிகாலை ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்து வந்து கொண்டிருந்தார். பின் எட்டு வழி எக்ஸ்பிரஸ் சாலையில் ராஜசேகரின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது பெட்டா கோல்கொண்டா என்ற இடத்திற்கு அருகே வந்தபோது சென்டர் மீடியனில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில் நடிகர் ராஜசேகர் படுகாயம் அடைந்தார் என்று கூறுகிறார்கள். இதுபற்றி உடனே போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்கள்.

இதையும் பாருங்க : 3 முட்டையின் விலை இத்தனை ஆயிரமாம். பில்லை பதிவிட்டு புலம்பிய இசையமைப்பாளர்.

மேலும்,விபத்து இடத்திற்கு போலீசார் விரைந்து வருவதற்குள் வேறு ஒரு காரில் நடிகர் ராஜசேகரை அழைத்துச் சென்றார்கள். பின் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காரை சோதனை செய்தார்கள். மேலும்,அந்த காரில் இருந்து இரண்டு வெளிநாட்டு மதுபானங்களும், ஒரு டம்ளரும் எடுத்தார்கள். அதோடு காரில் இருந்த மூன்று பெயர்களும் வெடித்த நிலையில் இருந்தது. இதனால் கார் வேகமாக வந்ததால் தான் விபத்து உள்ளானது என போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஆர்.வெங்கடேஷ் அவர்கள் கூறியது. கார் அதிவேகமாக வந்ததால் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது.

-விளம்பரம்-

மேலும், சொகுசு கார் என்பதால் விபத்து நிகழும் போது காரில் ஏர்பேக் ஓபன் ஆகி பெரும் விபத்திலிருந்து ராஜசேகரை காப்பாற்றியுள்ளது. மேலும், நாங்கள் வருவதற்கு முன்னரே அவரை மருத்துவமனையில் அழைத்துச் சென்றுவிட்டார்கள். அதோடு நாங்கள் தீவிர விசாரணை நடத்திய போது தான் தெரிந்தது காரில் மதுபானங்கள் இருந்தது. ஆனால், அவர் மதுபோதையில் இருந்தாரா? என்பது பற்றிய ஆய்வுகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறினார். மேலும், இந்த விபத்து குறித்து ராஜசேகரின் மனைவி நடிகை ஜீவிதாவிடம் கேட்டபோது அவர் கூறியது, விபத்தினால் என்னுடைய கணவர் ராஜசேகருக்கு சிறு காயங்கள் தான் ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கு விபத்து நடந்ததை அந்த வழியாக சென்று இருந்த ஒரு குடும்பத்தினர் பார்த்து என்னுடைய கணவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

காரில் மதுபாட்டில்கள்... போதையில் நடிகர் ராஜசேகர் கார் ஓட்டி விபத்து ஏற்பட்டதா...?

தற்போது அவர் நலமாக இருக்கிறார். மேலும் போலீசிடம் தெரிவிக்க வேண்டிய விஷயங்களை உரிய முறையில் செய்யப்பட்டு விட்டன என்றும், கார் சக்கரம் பழுதடைந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என்றும் கூறினார். இந்நிலையில் நடிகர் ராஜசேகர் காரை வேகமாக ஓட்டுவார் என்பது தெரியும். எப்படின்னா ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு வேகமாக காரை ஓட்டி வந்து தொழிலதிபர் ஒருவரின் கார் மீது மோதிய சம்பவம் அப்போது பரபரப்பாக இருந்தது. இதையடுத்து தற்போது அவர் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய ஆர்டிஓவுக்கு பரிந்துரைப்போம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மேலும், இந்த விபத்து தொடர்பாக ராஜசேகர் மீது விசாரணை நடக்குமா? என டோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement