ட்ராகன் படத்தின் 100வது நாள் விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தற்போது இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் ‘கோமாளி’ படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு தான் ஆகி இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘லவ் டுடே’.

இந்தப் படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மற்ற இயக்குனர்களின் டைரக்ஷனில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் ‘டிராகன்’. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து முதல் முதலாக ‘ஓ மை கடவுளே’ என்கிற திரைப்படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ராகன் படம்:
இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மட்டும் இல்லாமல் எதிர்பார்த்ததை விட இஅதிக வசூல் சாதனையும் செய்திருந்தது என்றே சொல்லலாம். மேலும், இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பிரதிப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இருவருமே நன்றி தெரிவித்து இருந்தார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு அஸ்வத் மாரிமுத்துவிற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருக்கிறது.

ட்ராகன் 100 நாள்:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய நூறாவது நாள் விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் பட குழுவினர் அனைவருமே கலந்து கொண்டிருந்தார்கள். அதோட அவர்களுக்கு சிறப்பு நினைவு பரிசுமே வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது விழாவில் பேசிய பிரதீப் ரங்கநாதன், ஓ மை கடவுளே படம் பண்ணும் போது அஸ்வத், அதில் ஒரு கதாபாத்திரம் நடிக்க என்னை கூப்பிட்டார். ஆனால், நான் ஒரு நம்பிக்கையில் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று சொல்லிவிட்டேன். லவ் டுடேக்கு பிறகு அஸ்வத்க்கு படம் காண்பித்தேன்.
https://www.youtube.com/watch?v=hUd-gsSz53s
விழாவில் பிரதீப் சொன்னது:
நீங்கள் என்னை வைத்து ஒரு படம் இயக்குகிறீர்களா? என்று கேட்டேன். முதல் படமே அவருக்கு பெரிய ஹிட். அவருக்கு கண்டிப்பாக இரண்டாவது படத்தில் பெரிய சம்பளம் கிடைக்க வேண்டும். அவரிடம் நான், மார்க்கெட் பெரிதாக்கி விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். அதற்கு இன்னும் சில படங்கள் ஆகும் என்று நினைத்தேன். ஆனால், அடுத்த படத்திலேயே அந்த வாய்ப்பு அமைந்ததற்கு காரணம் ஆடியன்ஸ் ஆகிய நீங்கள் தான். லவ் டுடே படத்தின் ஹிட்டுக்கு பிறகு அவராகவே எனக்கு போன் பண்ணினார். நூறாவது நாள் படம் ஓடின மாதிரி படத்தை கொடுக்கிறேன் என்று சொன்னார்.
நன்றி சொல்லிய பிரதீப்:
அதே மாதிரி இன்று 100வது நாள். அஸ்வத் சொன்னதை காப்பாற்றி விட்டார். ரொம்ப நன்றி அஸ்வத். ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தோடு இது இரண்டாவது நூறாவது நாள் விழா. எனக்கு இது மூன்றாவது 100 வது நாள் விழா. டிராகன் படத்தினுடைய வெற்றி எனக்கு ரொம்பவே முக்கியம். காரணம், இயக்கத்தில் என்னுடைய முதல் படத்துக்கு பிறகு இரண்டாவது படம் வெற்றியாக வேண்டும். 'One time wonder' மாதிரி ஆகிவிடக்கூடாது. ஆனால், லவ் டுடே படத்தில் நான் நடிகராக அறிமுகமானதால் எனக்கு அது முதல் படம் மாதிரி ஆகிவிட்டது. அதுவும் ஹிட் ஆனது. மற்றவருடைய இயக்கத்திலும் நடிக்க முடியுமா? என்று பேசுவார்கள். அந்த படம் ஹிட் ஆகிவிட்டது. எல்லாத்திற்கும் காரணம் ஆடியன்ஸ் தான், அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.






