உயிரிழந்த தனது படத்தின் நடிகர். புகைப்படத்துடன் உருக்கம் தெரிவித்த திரௌபதி இயக்குனர்.

0
43505
mohan
- Advertisement -

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் தான் திரௌபதி. சமூகத்தில் நிலவும் சாதிவெறியர்களையும், ஜாதியால் நடக்கும் ஆவணக் கொலைகளையும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் திரௌபதி. இந்த படத்தில் கதாநாயகனாக அஜித் மச்சான், ஷாலினியின் சகோதரன் ரிச்சர்ட் ரிஷி நடித்து உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக டூலட் படத்தில் நடித்த சுசீலா நடித்து உள்ளார். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்த கதாநாயகி தான் இந்த படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பழைய வண்ணாரப்பேட்டை படத்திற்கு இசையமைத்த ஜூபின் தான் இசையமைத்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உட்பட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் சமூகத்தில் நடக்கும் நாடக காதல் பற்றி நிலவும் சம்பவங்களை வெளிப்படையாக காட்டி உள்ளது.

- Advertisement -

மேலும், பதிவு திருமண ஊழல்களை சுட்டி காட்டியுள்ளார்கள். இந்த படம் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான பொருட்செலவில் உருவாகி இருந்தாலும் வசூலில் சுமார் 14 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த படம் குடும்ப பெண்களின் ஆதரவை பெற்று உள்ளது. இந்நிலையில் திரௌபதி படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இறந்துள்ளார் என்று இயக்குனர் மோகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

திரெளபதி' படத்தின் தொலைக்காட்சி ...

-விளம்பரம்-

திரௌபதி படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மண்ணாங்கட்டி அண்ணன். இவர் அரியலூரை சேர்ந்தவர். இன்று இவர் நம்முடன் இல்லை. மண்ணாங்கட்டி அண்ணன் தற்போது இறைவனடி சேர்ந்தார். அண்ணனின் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் கடவுளை வேண்டுவோம் என்று கூறியுள்ளார். தற்போது இந்த ட்விட் சோசியல் மீடியோவில் வைரலாகி வருகிறது. மண்ணாங்கட்டி அண்ணனுக்கு திரை உலகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் மோகன் அவர்கள் திரௌபதி படத்திற்கு பிறகு தன்னிடம் 5 கதை தயாராக இருக்கிறது என்றும், ஒன்றின் பின் ஒன்றாக அதனை செய்யவில்லை என்றாலும் என்னுடைய அடுத்த படம் கண்டிப்பாக நடிகர் ரிச்சர்ட் உடன் தான் இருக்கும் என்று கூறி உள்ளார். மேலும், அவர் பெரிய ஹீரோக்களின் படம் வந்தால் கூட இவருடைய அடுத்த படத்தை ரிச்சர்ட்டை வைத்து தான் இயக்க உள்ளதாக சமீபத்தில் பேட்டியில் கூறி இருந்தார்.

Advertisement