சமீபத்தில் வெளியான ‘சார்ப்பட்ட ‘ படத்தின் ட்ரைலர் குறித்து மோகன் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படமும் ஜாதி ரீதியாக எடுக்கப்பட்ட படம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கீழ்த்தட்டு மக்களை கெட்டவர்கள் போல இந்த படம் பிரதிபலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால், தான் இந்த படத்தில் நாடகக் காதலை தான் காண்பித்து இருந்தேன் என்று கூறி இருந்தார் மோகன். இருப்பினும் இந்த படம் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றது.
சமீபத்தில் இந்த படத்தை இந்தியில் எடுக்க வேண்டும் என்று கூட ட்வீட் செய்து இருந்தார் மோகன். இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா படத்தின் ட்ரைலர் குறித்து மோகனிடம் கருத்து கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த மோகன், ட்ரைலரில் நிறைய கடின உழைப்பையும் தரத்தையும் காண முடிகிறது.
என் ஏரியா படம் . படத்தின் கருத்து நன்றாக இருந்தால் படத்தை நான் கொண்டாடுவேன். 22 ஆம் தேதி வரை காத்திருப்போம். வாழ்த்துக்கள் ரஞ்சித் மற்றும் ஆர்யா. என்று பதிவிட்டுள்ளார். மோகனின் இந்த பதிவு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இவரை போலவே ஜாதியை மையமாக வைத்து தொடர்ந்து படம் எடுத்து வரும் பா ரஞ்சித்தின் படங்களும் பல சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. அதே போல ரஞ்சித் மற்றும் மோகன் இருவரும் எதோ எதிரிகளை போல தான் இருந்து வருகின்றனர்.
திரௌபதி படம் வெளியான போது அந்த படம் குறித்து ரஞ்சத்திடன் கேட்ட போது அவர் எந்த பதிலையும் சொல்லவில்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கர்ணன் படமும் வன்னியர்கள் மத்தியில் கொஞ்சம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. வன்னியர்களின் கடவுளான திரௌபதி பெயரை நாயகிக்கு வைத்து ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே போல ‘பண்டாரத்தி’ என்ற பாடல் வரி இடம் பெற்றதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்ததால் பின் அந்த வரி ‘மஞ்சணத்தி’ என்று மாற்றப்பட்டது. அதே போல மோகன், திரெளபதி தாயை கேவலமா பேசுன வாய் மன்னிப்பு கேட்கும்.. திரெளபதியை வணங்குற ஒருத்தனும் உங்களை ஆதரிக்க மாட்டான் என்று பதிவிட்டு இருந்தார்.